October 21, 2021

ஒருநாள் போலீஸ் கமிஷனரான 10 வயது சிறுவன்! – ஹைதராபாத் நெகிழ்ச்சி

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த 10வயது சிறுவன் சாதிக். உடல்நலக்குறைவு காரணமாக இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே அவனிடம் கலந்துரையாடிய பலரிடமும் தனது உறவினர்களைப் போல தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது என் ஆசை என்று தெரிவித்துள்ளான். சாதிக்கின் இந்த விருப்பம் மேக் எ விஷ் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது.
10_Year_Commissioner.
இதை தொடர்ந்து இன்று ஒருநாள் சாதிக்கை போலீஸ் கமிஷனராக்கி, அவனது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் மகேந்தர் ரெட்டி. போலீஸ் உடை அணிந்து வந்த சாதிக்கை, மகேந்தர் ரெட்டி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சல்யூட் அடித்து வரவேற்றனர். பின்னர் இன்று கொஞ்ச நேரம் தன் கமிஷனர் நாற்காலியில் சிறுவனை அமரச் செய்தார்.

பின்னர் அந்தக் குட்டிக் கமிஷனரிடம் பேச்சுக் கொடுத்த போது “ரவுடிகளை துரத்திச் சென்று பிடிப்பது தனக்கு மிகவும் தனது ஆவலை வெளியிட்டுள்ளான். இது குறித்து மகேந்தர் ரெட்டி ”சிறுவனின் ஆசையை நிறைவேற்றியதில் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.