October 22, 2021

ஒபாமா இந்தியா வருகிறார்: குடியரசு தின விழாவில் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற ஜனவரி மாதம் இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தின ராக அவர் கலந்து கொள்கிறார்.இதை பிரதமர் மோடி, நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
obama india
கடந்த செப்டம்பர் மாதம், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணம், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அப்போது அவருக்கு ஒபாமா தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து கவுரவித்தார்.
அதில் இந்திய- அமெரிக்க உறவை வலுப்படுத்துவது, இரு தரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமல்லாது, உலக விவகாரங்கள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒபாமாவை இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஒபாமாவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.இந்த நிலையில், ஒபாமாவின் இந்திய வருகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி மாதம் இறுதியில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதைதான் பிரதமர் மோடி, நேற்று தன் ‘டுவிட்டர்’ பேஜில் தெரிவித்துள்ளார்.அதில் அவர், தலைநகர் டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.