October 22, 2021

ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்!

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் முன்னணி இயக்குனர் ஷங்கர், சீயான் விக்ரம்,எமி ஜாக்சன்,சுரேஷ்கோபி உள்ளிட்ட பல டாப் பிரபலங்களை வைத்து இயக்கி வரும் படம் ”ஐ”. இப்படத்தின் பெரும்பகுதியை ஷுட் செய்து விட்ட ஷங்கர், தற்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் வில்லன் பெரும்பாலானோர் கண்களுக்கு அதிகம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர், பல மாத தேடல்களுக்குப் பிறகு சிவாஜிகணேசனின் மூத்த பிள்ளையான ராம்குமாரை கமிட் செய்துள்ளார்.இதையடுத்து,கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அரிதாரம் பூசி, அதிரடி வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார் ராம்குமார். நடிப்பு ரத்தத்தில் ஊறிப்போனதால், வித்தியாசமான வில்லனாக, மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஸ்பாட்டை கலக்கிக் கொண்டிருக்கிறாராம்.
Ramkumar Ganesan @ Karnan Movie Trailer Launch
ஆஸ்கார் மூவிஸ் ரவிசந்த்திரன் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ட் செய்யும் படம் ஐ. இந்த படத்தில் நடிகர் விக்ரம், எமி ஜாக்சன்,சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.இப்படத்தி விக்ரம் நம்பமுடியாத அலவு வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக நினைத்து பார்க்க முடியாத அளவு மாறி உள்ளதாக தக்வல் வெளியான நிலையில் இப்படத்தின் பட்ஜெட் 150 கோடி என்றும், படத்தின் கதை இதுதான் என்றும் பல்வேறு கதைகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் இப்படத்தின் பெரும்பகுதியை முடித்து விட்ட ஷங்கர், இப்போது வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறாராம்.படத்தின் வில்லன் பெரும்பாலானோர் கண்களுக்கு அதிகம் தெரியாதவராக இருக்க வேண்டும் என்று நினைத்த ஷங்கர், பல மாத தேடல்களுக்குப் பிறகு சிவாஜிகணேசனின் மூத்த பிள்ளையான ராம்குமாரை வில்லனாக கமிட் செய்துள்ளாராம்.அப்பா சிவாஜி, தம்பி பிரபு ஆகியோர் பெரிய நடிகர்கள் என்ற போதும், சினிமாவில் பிரபு நடித்த அறுவடைநாள் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே நடித்த அனுபவம் ஏற்கனவே இருந்ததால், ஷங்கர் கேட்டுக் கொண்டதும் உடனே சம்மதம் சொன்னார் ராம்குமார். அதையடுத்து விக்ரம்-எமி சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று மாதக்கணக்கில் நடத்தி வந்த ஷங்கர், இப்போது வில்லன் போர்ஷனை படமாக்கி வருகிறாராம்.

1 thought on “ஐ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக தோன்றும் சிவாஜி மகன் ராம்குமார்!

Comments are closed.