October 16, 2021

ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு துறைமுகத்தில் டெக்னிகல் வேலை வாய்ப்பு!

மும்பை நேவல் டாக்யார்டு பணி வாய்ப்பு நேவல் டாக்யார்டு எனப்படும் கப்பல் கட்டும் துறைமுகம் நம் நாட்டின் பல்வேறு துறைமுகங்களிலும் உள்ளது. இவற்றுள் மும்பை துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள 415 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : மும்பை துறைமுகத்தின் டெக்னிகல் காலி இடங்கள் ஒரு ஆண்டு பயிற்சி மற்றும் 2 ஆண்டு பயிற்சி என்ற 2 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.
10 vazhikatti ship
ஒரு ஆண்டு பயிற்சி பிரிவில் மெஷினிஸ்டில் 40, பிட்டரில் 60, மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயிண்டனன்ஸில் 35, இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் மற்றும் மேசன் பிரிவுகளில் தலா 15, ஏ.சி., மெக்கானிக் மற்றும் எலக்ட்ரோபிளேட்டரில் தலா 5, வெல்டரில் 20, பெயின்டரில் 30காலி இடங்கள் உள்ளன.

இரண்டு வருட பயிற்சியில் டீசல் மெக்கானிக், ரேடியோ, ரேடார் மெக்கானிக், பவர் எலக்ட்ரீசியன், ப்ளம்பர்/ஷிப் பிட்டர், ஷிப்ரைட் உட் ஆகிய பிரிவுகளில் தலா 20, பவுண்டரி மேன், ஹீட் ட்ரீட்டரில் தலா 5, ஸ்டீல் ஷிப்ரைட்டில் 45, பைப் பிட்டரில் 15 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்
: விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பை குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்து அதன் பின்னர் ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். உயரம் குறைந்த பட்சம் 150 செ.மீ., இருப்பதோடு இதற்கு நிகரான எடை மற்றுல் உடல் அளவுகள் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். இந்த தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: சாதாரண தபாலில் மட்டுமே இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.10.2013

முகவரி:
Naval Dockyard,
Post Box no. 10035,
GPO, Mumbai – 400 001