September 20, 2021

ஆட்சியாளர்களின் வாய்மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணிக்கலாம்!

அரசின் குறிப்பிட்ட பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் காலத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். அதனை அடுத்த 3 மாதத்துக்குள் மத்திய அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.என்றும் தங்களது அரசியல் எஜமானர்களின் வாய் மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
31 - Indian-Administrative-Service-IAS
ஐ.ஏ எஸ். அதிகாரிகளின் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக முடிவு செய்ய சிவில் சர்வீஸ் வாரியம் ஒன்றை அமைக்க கோரியும், நிர்வாக விஷயங்களில் அரசியல் தலையீடுகள், ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பித்தது. மேலும் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அதிகாரிகள் பலிகடா ஆவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் ஒரு பதவியில் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணிக்காலம் குறிப்பிட்ட காலவரம்பு உடையதாக இருக்க வேண்டும் என்றும், இதனை முடிவு செய்வதற்கான சிவில் சர்வீஸ் வாரியத்தை மூன்று மாத காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடிக்கடி அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் அரசின் கொள்கைகளூம், நலத்திட்டங்களும் ஏழை மக்களை சென்றடையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

Supreme Court reduces political pressure on bureaucrats
**********************************************************************
The Supreme Court on Thursday drastically reduced political pressure on top bureaucrats by ruling that they must get an assured minimum tenure in posting.
“Fixed tenure of bureaucrats will promote professionalism, efficiency and good governance,” the SC bench observed. “Much of the deterioration in the functioning of bureaucracy is due to political interference,” the SC said.