September 27, 2021

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

ஐ என் எஸ் விக்ரமாதித்யா – என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை இயக்கும் செலவு அப்போதைய ர்ஷிய பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டதன் காரணம் தான், பின்பு இது கடலோர குப்பையாய் இருந்த இதை பல ஆண்டு பேசி ஒரு வழியாய் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வாங்கப்பட்டது. அதாவது டீல் எப்படி – கப்பல் இலவசம். அதை 800 மில்லியன் பராமரிப்பு செலவை இந்தியா ரஷியாவுக்கு கொடுக்க வேண்டும். அது போக 1 பில்லியன் – 100 கோடி டாலர்கள் புது விமானமும் ரேடார்கள் மற்றூம் ரன்வே பராமரிப்புக்காக ஒதுக்கபட்டு 3 வருடத்துக்குள் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட இந்த கப்பல் பல பிரச்சினைகளை சந்தித்தது.2008 ஆம் ஆண்டு ரிட்டையர் ஆக வேண்டிய ஐ என் எஸ் விராட் இந்த டிலே பிரச்சினையால் 2012 வரை உழைக்க கட்டளையிடப்பட்டது.
nov 19 - ravi INS VIkramaditya
1960ல் இருந்து இந்தியாவில் விமானம் தாங்கிய கப்பல் கொண்ட இந்திய ரானுவம் 2008 முதல் இன்று வரை விமானம் தாங்கிய கப்பல் இல்லாமல் இருந்த ரிஸ்க் காலம் இது தான். விராட் குற்றூயிரும் கொலையுருமாய் பட்டி பார்த்து அதை 2012 வரை வைத்து கடந்த ஒரு வருட கால இந்திய நேவியின் ரிஸ்க் இன்னும் யாருக்கு எடுத்துரைக்கவே இல்லை. இது இந்தியாவுக்கு பெரிய ரிஸ்க் ஆகும். பிரச்சினை என்ன? பரமாரிப்புக்காக 800 மில்லியன் டாலர் என ஒத்து கொண்ட இந்தியா வருடா வருடம் டிலே என்பதால் பட்ஜெட் எகிறி கொண்டு போனது. கேபிள் வேலை மட்டும் டபுள் ஆகியது. கடைசியில் இந்தியா 2009 ஆம் ஆண்டு இன்னும் 120 கோடி டாலர் தருகிறேன் என்று கூறி பணிந்த காரணம் ரஷியா 2008 ஆம் ஆண்டு இந்த பிராஜக்ட்டை ஸ்கிராப் செய்வதாய் மிரட்டியது. இதனால் சி ஏ ஜி எனப்படும் இந்தியன் அரசாங்க ஆடிட்டர்ஸ் ஒரு பழைய கப்பலுக்கு ஏன் 235 கோடி டாலர் என கேட்டு இதற்க்கு புதுசு வாங்கியிருக்கலாம் என கூறிய போது இந்திய ரானுவ செகர்ட்டிரியோ நான் வேண்டுமானல் உடனே 200 கோடி செக் தருகிறேன் ஒரு கப்பலை வாங்கி காட்டுங்கள் என கூறி இந்த பிரச்சினைக்கு முற்றூபுள்ளி வைத்தாலும் 2010 ஆம் ஆண்டு தொடங்கிய சோதனை போன வாரம் தான் டெலிவரி கொடுக்கும் கட்டத்துக்கு வந்தது – இல்லை வைக்கப்பட்டது. 340 கோடி டாலர் தான் இதன் கடைசி விலை என 2008ல் மிரட்டிய ரஷியாவை மாற்றீயது 2010 ஆம் ர்ஷிய பிரதமரின் வருகை ஒரு வழியாய் 235 கோடி டாலருக்கு முடிவு செய்தமைக்கு முக்கிய காரணம் பிஜேபியின் சி ஏ ஜியின் அழுத்தம் தான்.

இந்த டிலே ஏன் என்று ஆராய்ந்த போது 2010ல் இதிலும் ஒரு பெரிய ஊழல் இந்தியா செய்கிறது என அலர்ட் செய்த ரஷிய அட்மிரல் கோர்கோஷெவ். இதனால் இதன் பிராஜக்ட் இயக்குனராய் இருந்த சுக்ஜிந்தர் சிங் இதன் பொறூப்புகளில் இருந்து விடுவிக்கபட்டார். அப்படி இப்படின்னு பல டிரையல் முடிச்சு 16 நவம்பர் இதனை கமிஷன் செய்த போது சிறப்பு விருந்திரனாய் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோனி இந்தியா சார்பில் சென்றார். இந்திய மற்றும் ரஷிய ராணுவ அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு 320 நாட் வேகத்தில் வரும் இந்த கப்பலில் மொத்தம் நீலம் கால் கிலோமீட்டருக்கு மேல் அதாவது 283..5 மீட்டர் அகலம் 59.8 மீட்டர் 1400 முதல் 2000 பேர் இருக்கும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். இதில் 34 விமானங்கள் – மிக் 29 மற்றூம் ஹெலிகாப்டர்களும் அடக்கம். இதில் இந்தியாவின் துருவ்ம கூட அடக்கம்.

இது இந்திய ராணுவத்துக்கு பெரிய மேட்டர் இதன் ரேஞ் 13,000 கிலோமீட்டர்கள். ஒரு வழியாய் இந்தியாவின் எலக்ஷனுக்கு முன்னாடி வரலைனா காங்கிரஸ் டவுசர் அவுந்திரும்னு அவசர கதியில வரும் கப்பலை . இதற்க்கு நடுவே முந்தா நாள் நேட்டோ விமானம் வெகு அருகில் கண்காணிக்க வட்டமடித்து நிறைய புகைப்படங்களை எடுத்தது. அது போக விமானத்தின் அக்வுஸ்டிக் ஒலியை கண்காணிக்க விமானம் அருகே ஒரு டுரோனையும் இறக்கிய புகைப்படத்தை ராணுவம் வெளியே சொல்லுமா இதன் பிரத்யோகப்படங்கள் உங்களுக்கே. நேட்டோவுக்கு போட்டோ ஆதாரத்துடன் அனுப்பிய கேள்விக்கு இன்னும் மவுனம் மட்டுமே பதிலாக தந்துள்ளது. வாஜ்பாய் என்னும் மாமனிதரின் 10 வருட கனவு இன்னும் சில நாட்களில் இந்தியாவில் காணலாம்.

26 Years Old Ship INS Vikramaditya heading to India Finally – 10 Years Stalemate Story and NATO Spying – Full Story

மேலும் புகைப்படங்கள் காண:;
https://www.facebook.com/media/set/?set=a.706317999386598.1073741851.100000252143571&type=1&
amp;l=77b265e18d

வீடியோ பார்க்க:;http://www.youtube.com/watch?v=GuExAt3gwBc