October 19, 2021

ஐஸ்வர்யாராய் ரீ-என்ட்ரி ஆகிறார்!

1997-ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யாராய். அதன்பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமானவர் திருமணமாகி குழ்ந்தை பெற்றதையடுத்து நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்தார். இதற்கிடையில் கடல் திரைப்படத்தின் ஏமாற்றத்தைத் தொடர்ந்து, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் விரைவாக ஒரு ஸ்க்ரிப்டை தயார் செய்துள்ள மணிரத்னம், அந்த ஸ்க்ரிப்டில் நடிக்க ஐஸ்வர்யா ராயை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோரை ஏற்கனவே தனது திரைப்படத்தில் கமிட் செய்துவிட்ட மணிரத்னம் அனைத்து திரையுலகத்திற்கும் பழக்கப்பட்ட ஒரு நடிகை தேவை என்பதால் தனது ஃபேவரிட் நடிகை ஐஸ்வர்யாராயை தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.
jan 24 - Aishwarya-Rai
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மகள் ஆரத்யா பிறந்தபின்பு படங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டார் . தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக டாப் ஹீரோயினாக வல்ம வந்த ஐஸ்வர்யா ராய்-க்கு மகள் ஆரத்யா பிறந்த பிறகு படங்களில் நடிக்கவில்லை. குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிடுகிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான் மணிரத்னம் இந்தி டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி ஆகியோர் ஐஸ்வர்யாராயை சந்தித்து கதை சொல்லி உள்ளனர். இதில் மணிரத்னம் சொன்ன கதை மிகவும் பிடித்து போனதாம். எனவே இந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கதாநயாகனாக நடிக்கிறார். நாகார்ஜுனாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகும் என தெரிகிறது.