October 16, 2021

ஐஸ்வர்யாராய் நடிக்கும் புதிய தமிழ் படத்தை இயக்குகிறார் பி. வாசு!

சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பி.வாசு, கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை செதுக்கி வருகிறார். அதிலும் இந்த கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக இதனை உருவாக்கவிருக்கிறாராம்.“ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என இப்படத்திற்கு தற்போது பெயரிடப் பட்டுள்ள இப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராய் பச்சன் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்பது ஒட்டுமொத்த திரையுலகமே ஆச்சரியப்படும் செய்தியாகும்!
iswarya rai
குழந்தை பிறந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யாராய் பச்சன், பி.வாசுவிடம் இக்கதையைக் கேட்ட மாத்திரத்தில் ’வாவ்’ என்று ஆச்சரியப்பட்டு உடனேயே ஒத்துக் கொண்டாராம்..!அத்துடன் தான் இதுவரையில் நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரம் என்பதால்தான் நடிக்க ஒத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் விஷுவல் எபெக்ட்ஸ், அனிமேஷன்களுக்கு நிறைய காட்சிகள் உள்ள படம் என்பதால் பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் இப்படத்திற்காக பிரத்தியேகப் பணியாற்ற உள்ளனர்.

அத்துடன் இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த சிறந்த மற்றும் முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்கள் இசையமைப்பாளராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, கலை இயக்குனராக, சண்டைப் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளனர்.வட இந்தியாவில் உள்ள பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும், பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள அரங்குகளிலும் இப்படம் படமாக்கப்பட உள்ளது. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.