September 21, 2021

ஐயே..சிறிசேனா வேஸ்ட்ப்பா! – இலங்கை அமைச்சரவையில் 4 பேர் ராஜினாமா!

இலங்கையில் அதிபராக இருந்த ராஜபக்சே தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. சிறிசேனா இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர் என்றாலும், இந்த கூட்டணி அரசில் அவர்களின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
srisena
இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். மஹிந்த யாப அபேவர்த்தனே, தில்லான் பெரேரா, சி.பி.ரதநாயகே, பவித்ரதேவி வன்னியரச்சி ஆகியோர் ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் “பிரதமர் விக்ரமசிங்கேவும், அவரது ஐக்கிய தேசிய கட்சியும் அரசியல் அடக்குமுறையை கையாண்டு வருகிறது. கூட்டணி அரசின் முழு கட்டுப்பாட்டையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிபர் சிறிசேனாவுக்கு அரசில் எந்த செல்வாக்கும் இல்லை.அரசுக்கு இந்த கூட்டணி கட்சியால் எந்த பலனும் இல்லை. அவர்கள் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் காப்பாற்ற தவறிவிட்டனர் என்று கூறினர்.