October 19, 2021

ஐடிஐ படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், போர்ட்டர், பியூன், ஸ்டோர் கலாசி, துப்புரவாளர், தண்டவாளப் பராமரிப்பாளர் பணியிடங்கள் நிரப்ப ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 - vazhikatti the-southern-railway.
மொத்த காலியிடங்கள்: 5,450

பணி
– துறைவாரியான காலியிடங்கள்:

1 Trackman -1,539

2 Helper Electl. – 642

3 Helper S & T -118

4 SCP/Porter – 847

5 Helper Mechl.- 588

6 Peon Genl. -102

7 Safaiwala Medical -132

8 Store Khalasi -92

9 Helper WS(M) – 757

10 Helper WS(E) -107

11 Helper TMU -261

12 Peon/Mali/Sanitary Cleaner/Vendor/Helper Gr.II -252

13 Track Maintainer Gr.IV -13

கல்வித்தகுதி
: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்
: ரூ.5,200 – 20,200 Grade Pay ரூ.1,800

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 – 33 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, ஒபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர், ரயில்வே துறையில் பணியில் இருப்பவர்களுக்கும், விதவைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. இதனை Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitmant Cell,Chennai – 600008 என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், No Objection சான்றிதழையும் சேர்த்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப அஞ்சல் உறையின் மீது APPLICATION FOR RECRUITMENT TO POSTS IN PAY BAND-1 WITH GRADE PAY OF Rs.1800/-IN SOUTHERN RAILWAY & ICF என்று எழுத வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Personnel Officer/ Recuitment, Railway Recruitment Cell, Southern Railway, No.5, 3rd floor, Dr.P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600008.

ஆன்லைனில் விண்ணப்பிக்க www.iroams.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2013.