September 25, 2021

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீர்! – ஆந்திராவில் அமோகம்

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் கிராமங்களின் நிலை நகரத்திற்கு இணையாக மாறிக் கொண்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு கிராம மக்களுக்கு, துாய்மையான குடிநீர் கிடைக்க கிராமங்கள் தோறும், ஏ.டி.டபிள்யூ., குடிநீர் திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த, 2012 ஏப்ரல் 7ல், ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டத்தின் வெங்கடாபுரத்தில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப் பட்டது.இத்திட்டம் பெரும் வர்வேற்பைப் பெற்றதால், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா உள்பட, 351 கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
water oct 4
‘பாலவிகாஸ்’ என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.’துாய்மை குடிநீர்’ திட்டத்தின் கீழ் 702 ஏ.டி.டபிள்யூ., ப்ளான்டை இந்நிறுவனம் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தி உள்ளது.இந்த இயந்திரங்களை அமைக்க கிராம மக்களிடமிருந்து ஒரு குடும்பத்திற்கு 1,000 ரூபாய் வசூலித்து மீதி தொகையை பாலவிகாஸ் நிறுவனம் ஏற்று ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு ஏ.டி.டபிள்யூ., இயந்திரங்களை ஏற்படுத்தியது.

ஆயிரம் ரூபாய் அளித்த குடும்பத்தினருக்கு அவர்களின் பெயரில் ஒரு, ஏ.டி.டபிள்யூ., கார்டு வழங்கப்பட்டது.அந்த கார்டை இயந்திரத்தில் சொருகி துாய்மையான குடிநீர் பெறலாம். ஒரு கார்டு மூலம் ஒரு ரூபாய் அளித்து நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் வரை பெற்றுக் கொள்ள லாம். காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை குடிநீர் வரும்படி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிசினல் தேவைக்கு நான்கு ரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பெறலாம்.

இதற்காக, ஆண்டுக்கு 360 ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் வசூலிக்கிறது. இந்த கார்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள வேண்டும். அத்துடன் எவ்வளவு தண்ணீர் பெற்றுள்ளனர், அதற்குண்டான தொகை அனைத்தையும், அந்த இயந்திரத்தில் கார்டு செலுத்தி தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.