September 23, 2021

ஏ.ஆர். ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா -மார்க்கத் தீர்ப்பு!

முஹம்மது நபியின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்’ என்கிற இரானிய மொழி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்துள்ளது.
a r rahaman allah
ஃபத்வா என்றால் ஒருவர் இஸ்லாமிய நெறி முறைப்படி நடக்கிறாரா..? இருக்கிறாரா..? செயல்படுகிறாரா..? என் றெல்லாம் பார்ப்பதுதானாம். இஸ்லாத்தின் புனித நூலான குரானில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மைய மாக வைத்தே இந்த ‘நெறிமுறைப்படி’ என்கிற வார்த்தை அர்த்தப்படுத்தப்படும். அவர்களுடைய செயல் இஸ்லாத் துக்கு அந்நியமானது என்றோ, குரானில் சொல்லப் பட்டிருக்கும் கூடாத விஷயங்களை பின்பற்றுகிறது-ன்னோ தெரிஞ்சால் அந்த நபருக்கு, அல்லது அவர்களுக்கு ஃபத்வா என்னும் இத்தடையை விதித்து இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேற்றுவதாக அறிவிப்பார்கள். இதைத்தான் இப்போது இந்த மும்பை சன்னி பிரிவு இஸ்லாம் அகாட மியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த ஃபத்வாவை அறிவித்திருப்பது சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் நாடு முழுக்க உள்ள எல்லா முஸ்லீம் அமைப்புகளும் இதனை ஏற்பாங்கண்ணூ சொல்ல முடியாது. அதிலேயும் ரஹ்மான் நம்ம சென்னையில் வசிப்பதால் இந்த ஃபத்வாவினால் அவருக்கு எந்தத் சிக்கலுயும் இருக்காது-ன்னுதான் சொல்றாங்க

இதனிடையே ஃபத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் சயீத் நூரி இதுபற்றி கூறும்போது, இந்த தலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லையென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அது நபிகளுக்கு அவமதிப்பாகும் என்றார். இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் அவர் கடிதாசி எழுதியுள்ளார்.