September 25, 2021

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க சார்பில் சரோஜா – ஜெ. அறிவிப்பு

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சரோஜா போட்டியிடுவார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். சரோஜா மறைந்த ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ பெருமாளின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
23 - yergud jayalalitha_
அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு முடிவை அடுத்து இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக சரோஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அங்கு, வரும் டிசம்பர் 4 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது வேட்பாளரான சரோஜா இதே தொகுதிக்கு உட்பட்ட புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த வரதப்பகவுண்டர் என்பவரின் மகளான இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 1975-ம் ஆண்டு, பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாளை திருமணம் செய்தவுடன் தன்னுடைய அங்கன்வாடி ஆசிரியை வேலையை விட்டு விட்டார்.

திருமணத்திற்கு பிறகு, 1980 முதல் அதிமுக உறுப்பினராக மட்டுமே உள்ளார் சரோஜா. 1992-1996, காலத்தில் பாப்பநாயக்கன் பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார்.

பெருமாள் – சரோஜா தம்பதியினருக்கு, ராஜேஷ்கண்ணா, சுரேஷ்கண்ணா, சதீஷ், கார்த்தி என நான்கு மகன்கள் உள்ளனர். இதில், ராஜேஷ்கண்ணா சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளராகவும், கருமந்துறை மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இரண்டாவது மகன் ராஜேஷ்கண்ணா பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார், மூன்றாவது மகன் சதீஸ் தருமபுரி உதவி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். கடைசி மகனான கார்த்தி தற்சமயம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் மூன்று முறை அதிமுக எம்.எல்.ஏ.,வாக இருந்து தொகுதிக்கு ஓரளவு மக்களிடம் அறிமுகமான பெருமாளின் மனைவியான சரோஜாவுக்கு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பத்தின் மூலம் அந்த தொகுதியில் உள்ள மக்களின் அனுதாபத்தை சரோஜா பெறுவார் என்று கருத்து வெளியாகியுள்ளது