September 29, 2021

ஏற்காடு:தொகுதியை கைப்பற்றியது அ.தி.மு.க! டெபாசிட்டை மீட்டது தி மு க!

ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. பெருமாள் கடந்த ஜூலை மாதம் இறந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 4-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் தி.மு.க. வேட்பாளர் மாறனை 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா தோற்கடித்துள்ளார்.
yearcaud candi and Jayalalithaa
ஏற்காடு தொகுதியில் மொத்தம் 2,40,290 வாக்குகள். இந்த தேர்தலில் ஆண்கள் 1,05,620 பேரும், பெண்கள் 1,08,820 பேரும், திருநங்கை நான்கு பேர் என மொத்தம் 2,14,444 பேர் வாக்களித்தனர். 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின.முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா முன்னிலை பெற்றார். தி.மு.க. வேட்பாளர் மாறன் தொடர்ந்து பின்னடைவை சந்தி்த்து வந்தார்.சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் 78,116 வாக்குகள் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,42,771.

கடந்த கால இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சியே வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக தவிர்த்து எந்தக் கட்சியும் போட்டியிடாத நிலையில், யார் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. வேட்பாளர் டெபாஸிட்டை இழக்க வைக்க வேண்டும் என்பது ஆளும் கட்சி குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட நிலையில் தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கு 40 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்று அதனால் டெபாசிட்டை மீட்டிருருக்கிறது. குறிப்பிடத்தக்கது.