October 25, 2021

ஏர் இந்தியா ஆபீசரை செருப்பால் அடித்த விவகாரம் | சிவசேனா எம்.பி. மீது வழக்கு !

ஏர் இந்தியா நிறுவன அதிகாரியை காலணியால் சரமாரிய தாக்கிய சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ரவீந்திர கெய்க்வாட் பெயரை கருப்பு பட்டியலில் சேர்த்து, விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து உள்ளது.

sivsena mar 24a

சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட் டெல்லி செல்வதற்காக புனே விமானநிலையத்துக்கு வந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் ஏர் இந்தியாவின் பிசினஸ் வகுப்பில் செல்வதற்கு அவருக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் செல்வதாக இருந்த விமானத்தின் அனைத்து இருக்கைகளும் எகனாமி வகுப்பில் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் வேறு வழியில்லாமல் அதே விமானத்தில் பயணம் செய்த ரவீந்திர கெய்க்வாட், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும் விமானத்தை விட்டு இறங்காமல் இருந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் என்பவர் ரவீந்திர கெய்க்வாட்டை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர் சமாதானத்தை ஏற்க மறுத்த எம்.பி., விமான நிறுவன அதிகாரியை சரமாரியாக அடித்தும், சட்டையை கிழித்தும் வெறியாட்டத்தில் ஈடுபட்டார். தனது ஆத்திரத்தை இதோடு நிறுத்திக்கொள்ளாத எம்.பி,. விமான நிறுவன அதிகாரியின் கன்னத்தில் தனது காலணியால் 25 தடவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த விமான நிறுவன அதிகாரி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.