September 20, 2021

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் ஆபீசர் பணி வாய்ப்பு

நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை மேம்படுத்தவும், சர்வதேச தரத்துடன் இயக்கும் நோக்கத்தில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா நிறுவப்பட்டது. இண்டர் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும், நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவையும் ஒன்றிணைத்து 1995ல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., உருவாக்கப்பட்டது. நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழும் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிகியூடிவ் பணியிடங்கள் 200ஐ நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Airports-Authority-of-India

காலியிட விபரம்: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பதவியான 200ல் எஸ்.சி., பிரிவுக்கு 30ம், எஸ்.டி., பிரிவுக்கு 15ம், ஓ.பி.சி., பிரிவினருக்கு 54ம், பொதுப் பிரிவினருக்கு 101ம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., படிப்பை இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இதே போல் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முழு நேரப் படிப்பாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் ஜூனியர் எக்சிகியூடிவ் பதவிக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையிலான விண்ணப்பங்கள் 14.09.2015 முதல் விண்ணப்பிக்கத் தகுந்தபடி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.10.2015

இணையதள முகவரி: http://www.aai.aero/employment_news/Revised-Notification-JE(ATC)-170815.pdf