ஏப்- 11-ல் கோச்சடையான் ரிலீஸாகி நாள்தோறும் 144 கோடி வசூலிக்குமா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் பத்து மொழிகளில் பல ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.இதையடுத்து இந்த படத்தின் பட்ஜெட் ஒரு 300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இப்போது 700 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்தமாக லாபம் வர வாய்ப்புள்ளது. மற்ற செலவுகள் போக நிகர லாபம் 500 கோடி வரை வரும் என்று செய்திகள் வெளியானது வருமான வரித்துறையின் கண்களிலும் பட்டுள்ளதாம் .
Kochadaiiyaan
கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710 சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை எனக் கருதப்படுகிறது.இதில் அவதார்’, ‘டின் டின்’ உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட ‘ஃபோட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபாமென்ஸ் கேப்சர்’ தொழில்நுட்பத்தை முதல்முதலாக இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித் துள்ளது.

இந்நிலையில் ஏறக்குறைய ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக படத்தின் வெளியீடு நடைபெற உள்ளது.
அப்படியென்றால் படத்தின் வசூல் எவ்வளவாக இருக்கும் என்று கேள்வி கேட்டு ஒரு செய்தியை http://www.screen4screen.com/ வெளியிட்டுள்ளது.அதில் வெளியாகியுள்ள தோராயமான கணக்கு இதுதான் …

500 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டால், டிக்கட் விலை 120 ரூபாய் என்ற நிலையில் ஒரு காட்சிக்கு வசூலாகும் தொகை 60000 ரூபாய். 4 காட்சிகளுக்கு 2,40,000 ரூபாய்.அப்படியென்றால் 6000 திரையரங்குகளில் ஒரு நாளைக்கு மட்டும் வசூலாகும் தொகை 144,00,00,000 கோடி ரூபாய். ஒரு வாரம் ஓடினாலே வசூலாகும் மொத்த தொகை 1008 கோடி ரூபாய்.

படத்தின் பட்ஜெட் ஒரு 300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 700 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்தமாக லாபம் வர வாய்ப்புள்ளது. மற்ற செலவுகள் போக நிகர லாபம் 500 கோடி வரை வரும்.

இப்படி நடந்து விட்டால், இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் என்ற சாதனை ரஜினிகாந்துக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.