October 19, 2021

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு : செக்யூரிட்டிகள் லீவ் காரணம்!!

வங்கிகளின் சார்பில் பணம் நிரப்பும் நிறுவனங்களில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஏடிஎம்களில் 5 நாளுக்கு ஒரு முறைதான் பணம் நிரப்பப்படுகிறது. இதனால் பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பண்டிகை காலத்தில் ஏடிஎம்களை நம்பி வெளியே செல்லாமல் முன்கூட்டியே பணத்தை பாக்கெட்டில் போட்டு கொண்டு செல்வதே சரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
7 - a t m security. MINI
ஒரு காலத்தில் வங்கிகளில் சலானை பூர்த்தி செய்து டோக்கன் பெற்று கால் கடுக்க நின்று பணம் பெற்று வந்த நிலை மாறிவிட்டது. இப்போது ஏடிஎம்களிலேயே மக்கள், வங்கி பணிகளை முடித்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை பெரும்பாலான வங்கிகள் தனியார் நிறுவனங்களிடம்தான் அளித்துள்ளன. பாதுகாப்பு மிகுந்த வாகனங்களில் பணத்தை கொண்டு வந்து, தனியார் நிறுவனங்கள் நிரப்பிவிட்டு செல்லும். பணம் நிரப்ப வரும் ஊழியர்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய வீரர்களும் உடன் வருவார்கள்.

தற்போது நவராத்திரி பண்டிகை, தசரா, தீபாவளி என்று பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இதனால் பாதுகாப்பு வீரர்கள் பலர் விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மேலும், பலர் அடுத்ததாக விடுமுறையில் செல்ல உள்ளனர். இதனால் 3 பேர் இருந்த இடத்தில் ஒரு வீரர்தான் பணியில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீரர்களில் பெரும்பாலானவர்கள் வெளி இடங்களில் இருந்துதான் பணிக்கு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன. பாதுகாப்பு வீரர்கள் குறைவால், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது சாதாரணமாக 2 நாளுக்கு ஒரு முறை பணம் நிரப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது 5 நாளுக்கு ஒரு முறை பணம் நிரப்பப்படுகிறது. இதனால் பண்டிகை காலத்தில் ஏடிஎம்களை நம்பி வெளியே செல்லாமல் முன்கூட்டியே பணத்தை பாக்கெட்டில் போட்டு கொண்டு செல்வதே சரியாக இருக்கும்.

ATMs may run dry on shortage of guards this festival season
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
There may be cash crunch at ATMs this festival season on account of shortage of armed staff in private security agencies that provide logistics services to banks.The number of armed security guards in cash handling agencies have come down to one-third of what it was 6 months ago hitting the logistics operations, as per an industry estimate.