September 17, 2021

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ’பாகுபலி’ திரைப்படத்தின் மிரட்டல் போஸ்டர் ஆல்பம்!

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் எடுக்கபட்டு உள்ள ப்டம் பாகுபலி. படத்தை மகாதீரா, சத்ரபதி நான் ஈ ஆகிய படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ளார். 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்கி உள்ளனர். . இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் செலவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கதாநாயகனாக பிரபாஸும், கதாநாயகியாக அனுஷ்காவும் நடித்து உள்ளனர். பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹாலிவுட் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவதுபோலவே புரொடெக்‌ஷன் டிசைன் செய்து பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.. இதில் 9-ம் நூற்றாண்டின் ஆடைகள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகளுக்கான போர்க் கவசங்கள், அந்தக் காலகட்டத்தின் ஆயுதங்கள் என்று பயன்படுத்தி உள்ளனர்.படம் ஜூலை மாதம் திரைக்குவரவிருக்கிறது.