July 28, 2021

எழுவர் விடுதலை: தேர்தல் கமிஷன் விளக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டு தமிழக அரசு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசிடம் மூன்று நாட்களில் பதில் கேட்கப்பட்டுள்ள கடிதம் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் ஆதாயம் பெரும் பொருட்டு எழுதப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
rajiv mar 5


இந்நிலையில், வெள்ளிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த விதிமுறைகள் மத்திய அரசிற்கும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, 7 குற்றவாளிகளின் விடுதலை தமிழகத்தின் வாக்காளர்கள் இடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என மத்திய தேர்தல் ஆணையம் கருத்துகிறது.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தலைமை ஆணையர் நசீம் ஜைதி கூறுகையில், ‘இந்த வழக்கில் என்ன நடக்கும் என தேர்தல் ஆணையத்தால் யூகித்து உத்தரவிட முடியாது. இதுபோல் ஒரு சூழல் ஏற்படும் போது அதன் மீது எங்கள் பார்வையை கண்டிப்பாக செலுத்துவோம். இது வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் உறுதிப்படுத்துவோம்’ எனத் தெரிவித்தார்.

அதே சமயம் நளினி, முருகன் உள்ளிட்டவர்களின் சிறை நடவடிக்கைகள் மிகவும் நன்றாக உள்ளது என்று தமிழக அரசுக்கு வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று கொடுத்து கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால், 7 பேர் விடுதலை தொடர்பாக நேற்று வெளியான தகவல்படி எதுவும் நடக்கவில்லை.இவர்களின் விடுதலை தொடபாக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கும் மத்திய அரசு தற்போது, ‘இதை நாங்கள் பரிசீலிப்போம்’ என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளது.மேலும், இந்த 7 பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 பிரின் கீழ் விடுதலை செய்ய ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால், 161-வது சட்டப் பிரிவை பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.