October 22, 2021

எல் நினோ : தெற்காசிய நாடுகளை அலெர்ட் செய்ய தொடங்கிடுச்சு – நம்ம இந்தியா

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்ற தாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது. எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது. முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.
edit jan 24
கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது. மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும். இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.

இதைச் சுருக்கமாக சொவதானால் எல் நினோ என்பது பசிபிக் சமுத்திரத்தின் மத்திய மற்றும் கிழக்கு மத்திய பூமத்திய ரேகை பகுதியில் கடல்நீர் அதிக வெப்பம் அடைவதை அடுத்து உருவாகிறது. இதனால், உலகளவில் தட்பவெப்பம் மற்றும் மழை பொழிவில் மாற்றம் ஏற்படுகிறது. இது பற்றி புவி அறிவியல் அமைப்பின் அமைச்சக செயலாளர் ராஜீவன் கூறும்பொழுது, “எல் நினோ குறித்த தகவலை அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் வழங்கும் பணியினை நாங்கள் தொடங்கியுள்ளோம்” என கூறியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானியியலாளர் எஸ். பய் கூறும்பொழுது, ”ஒவ்வொரு மாதத்திலும் தகவல் வழங்கப்பட்டு வருகிறது. உலக வானியல் அமைப்பு இந்தியாவை மண்டல காலநிலை மையம் என அறிவித்துள்ளது.அதன்படி, தட்பவெப்பம் மற்றும் பருவகாற்று குறித்து பிற தெற்காசிய நாடுகளுக்கு நாங்கள் தகவல் வழங்கி வருகிறோம். தற்பொழுது, எல் நினோ குறித்த தகவலையும் நாங்கள் வழங்க தொடங்கியுள்ளோம்” என கூறியுள்ளார்.

இந்திய துணை கண்டத்தில் பருவகால பாதிப்பினை எல் நினோ ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 2வது வருடமும் இந்தியாவில் மழை பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்த நாடுகளில் மழையை நம்பியே விவசாயம் உள்ள நிலையில், தெற்காசிய பொருளாதாரத்தில் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய வட இந்திய பெருங்கடல் பகுதிக்குட்பட்ட இடங்களில் தோன்றும் சூறாவளி குறித்த தகவல்களையும் பாகிஸ்தான், ஓமன், மாலத்தீவுகள், தாய்லாந்து, மியான்மர், வங்காளதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கும் இந்தியா வழங்கி வருகிறது. கடந்த வருடம் சூறாவளி குறித்த தகவலை ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியா பகிர்ந்து அளித்தது. சூறாவளிக்கான மண்டல சிறப்பு வானியல் மையம் ஒன்றும் இந்தியாவில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.