October 21, 2021

எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன்!வீடியோ

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 2014- 15 ம் ஆண்டில் பயன்படுத்தப் பட்ட சிகரெட்கள் 9300.20 கோடி. இது, 2012 – 13ல் பயன்படுத்தப்பட்ட சிகரெட்களை விட 1000 கோடி குறைவு என தெரிவித்துள்ளது.ஆனால், உலக புகையிலை பயன்பாடு குறித்த ஆய்வில், 1980ம் ஆண்டில் 50.3 லட்சமாக இருந்த புகைப்பிடிக்கும் இந்திய பெண்களின் எண்ணிக்கை 2012ல் 120.7 லட்சமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.புகைப்பிடித்தலால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் சிகரெட் பயன்படுத்தும் 187 நாடுகளில் 1980 முதல் 2012ம் ஆண்டு வரை ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிகமான பெண்கள் புகைப்பிடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. புகையிலை பாதிப்புக்கு அதிகமானவர்கள் ஆளாகி இருப்பதும் இந்தியாவில் தானாம். இந்தியாவில், சிகரெட் பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதற்கு நேர்மாறாக சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதும் பல ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.
jupiter-io-3-
இந்நிலையில் புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் உலகெங்கும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுமையாக எலக்ட்ரானிக் சிகரெட் டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிடர் ஐ.ஓ.3 என்ற இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்துடன் வெளிவருகிறது. ஹெட்போனை போல் இ-சிகரெட்டு கருவியை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி அதிலுள்ள இ-சிகரெட்டிற்காகவும் இடம் பெற்றுள்ளது.

காபி, புதினா, சாக்லேட் என பல வாசனைகளில் திரவ கேட்ரிஜ்களுடன் கூடிய எலக்ட்ரானிக் சிகரெட் குச்சி இந்த போனுடன் தரப்படுகிறது.வேண்டிய நேரத்தில் இதை பொருத்தி புகைபிடித்துக் கொள்ளலாம். ஒரு கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும். இதற்கென தனியாக திரவ கேட்ரிஜ்ஜூ களும் உள்ளன. புகை பிடிப்பதன் மீதுள்ள மோகத்தை குறைக்கும் வகையில் வேப் எனும் அப்ளிகேஷ னும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப் எத்தனை முறை புகை பிடிக்கிறோம் என்பதை கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறது. 3ஜி இண்டர்நெட் வசதியுடன் கூடிய போன் ரூ.20 ஆயிரத்திற்கும், 4ஜி வசதி யுடன் கூடிய போன் ரூ.33 ஆயிரத்திற்கும் விற்பனைக்கு வருகிறது. எனினும், வழக்கமான சிகரெட்டு களுடன் ஒப்பிடுகையில் இது ஏதாவது கதிர்வீச்சு பாதிப்புகளை உண்டாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.