October 16, 2021

ஜிகா வைரஸ் பாதிச்ச ஊருக்கு போகாதீங்க ! – மத்திய அரசு அலெர்ட்

எபோலா வைரசை தொடர்ந்து தற்போது சர்வதேச நாடுகளை ஜிகா வைரஸ் பெரும் அச்சத்திற்குள்ளாக் கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஜிகா வைரஸ் பரவலை அசாதரண மான நிகழ்வு என்று குறிப்பிட்டு, பல நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவிப்பதாக தெரிவித்தனர்
virus feb 02
இதனிடையே நமது மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து சர்வ தேச விமான நிலையங்கள், துறைமுகங்களிலும் ஜிகா வைரஸ் பற்றிய பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். ஜிகா வைரசால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அந்தந்த விமான துறை சுங்க அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லை என்றாலும்,ஏடிஸ் கொசுக்கள் மற்றும் டெங்கு வைரஸ் மூலம் பரவும் வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை மந்திரி ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.கூட்டு கண்காணிப்பு குழு மூலமாக ஒட்டு மொத்த சூழ்நிலையும் கண்காணிக்கப்படும் என்றும், மத்திய மற்றும் மாநில நிபுணர்கள் அடங்கிய உடனடி துரித குழுக்கள் உஷார் நிலையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயணம் இல்லை எனில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.