October 21, 2021

“என் அப்பா உயிரிழந்து விட்டார் என்பதை நம்புகிறேன். அதே சமயம்,..!” – நேதாஜி மகள் கிளப்பும் சர்ச்சை

ஜெர்மன் நாட்டின் ஸ்டாட்பெர்கன் நகரில் தற்போது வசிக்கும் அனிதா போஸ், அங்கிருந்து பிடிஐ செய்திbose daughterயாளருக்கு அளித்த பேட்டியில், “தைவானின் தைபே நகரில் கடந்த 1945ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் எனது தந்தை நேதாஜி உயிரிழந்து விட்டார் என்பதை நான் நம்புகிறேன். அதே சமயம், ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் சாம்பல் என்று கூறப்படும் சாம்பலை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த சாம்பல் நேதாஜியுடையதுதானா என்பது உறுதியாகத் தெரிய வரும்.

நேதாஜி தொடர்பாக இந்திய அரசிடம் இருந்த 100 ரகசிய ஆவணங்கள் அண்மையில் வெளியிடப் பட்டன. அதில் சில ஆவணங் களை மட்டுமே நான் பார்த்துள்ளேன். அதில், நேதாஜியின் மரணம் தொடர்பான சான்றிதழ் இல்லாதது ஆச்சரிய மளிக்கிறது. நேதாஜி தொடர்பான ஆவணங்களை இந்திய அரசும், மேற்குவங்க அரசும் வெளியிட்டிருப்பதால், அவர் தொடர்பான ரகசியங்கள் முழுவதும் வெளி வருமா எனக் கேட்கிறீர்கள். அவ்வாறு வெளிவந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்.எனது தந்தை நேதாஜி குறித்து புத்தகம் எழுதும் திட்டமில்லை. அதேசமயம், எனது தாயார் எமிலி குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டுள்ளேன்” என்றார் அனிதா போஸ்.

இந்நிலையில், ஜெர்மனியில் வசிக்கும் அனிதா போஸ் இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அப்போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் சாம்பல் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்துவது குறித்து ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திட்ட மிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்