October 18, 2021

“என்னம்மா இப்படி பண்றீங்களேமா!” – தொடரும் சர்ச்சை

லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்க ளேமா வெர்ஸன் 2 என்கிற ஒரு நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதற்குத் தன்னுடைய ட்விட்டர் பக்கம் வழியாக எதிர்ப்பைப் பதிவு செய்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் விஜய் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸும் அனுப்பினார்.
cine jan 16
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றது குறித்து ஒரு பேட்டியில் கூறிய சிவகார்த்திகேயன், அது கிண்டல் செய்த நிகழ்ச்சியை முன்வைத்து உருவாக்கப்பட்ட பாடல் என்றார். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“அந்தப் பாடல், கிண்டல் செய்த நிகழ்ச்சியில் இருந்தே உருவாக்கப்பட்டது என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அது என்ன அப்படி ஒரு சிறந்த நிகழ்ச்சியா? அந்த நிகழ்ச்சி எல்லை மீறிய ஒன்று. என்னை மிகவும் காயப்படுத்தியது. அதை வணிகத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டீர்கள். என்னை கிண்டல் செய்த நிகழ்ச்சிதான் அதற்குக் காரணம் என்றும் கூறுகிறீர்கள். ஆனால், ஜீ தமிழ் நிகழ்ச்சிதான் காரணம் என்று கூறிவிட்டால் நான் உரிமை எடுத்துக்கொண்டு பணம் கேட்பேன் என அவர் நினைத்து விட்டார்போல. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன். எனக்கு அதைவிட வேறு உருப்படியான வேலைகள் உண்டு” என்று கூறியுள்ளார்.