April 17, 2021

என்னக் கொடுமை இது? ராஜேஷ்தாஸ் வழக்கு குறித்து ஐகோர்ட்!

தமிழகத்தின் டாப் போலீஸ் ஆபீசராக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது சென்னை ஐகோர்ட். அப்போது ஐபிஎஸ் அதிகாரியே புகார்தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆந்தை ரிப்போர்ட்டர் உள்ளிட்ட எல்லா சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்துள்ள பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியே புகார்தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? எனவே பெண் அதிகாரி புகார் கொடுத்ததை வைத்து அரசியல் செய்யவேண்டாம். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ, பயன்படுத்தவோ கூடாது என அறிவுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கை ஐகோர்ட் நேரடியாக கண்காணிக்கும் எனவும், விசாரனையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தரவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.