October 18, 2021

”எனது பயணம் இன்னும் முடியவில்லை”: எல்.கே. அத்வானி தகவல்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில்,அத்வானியின் கடும் எதிர்ப்பையும் மீறி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அத்வானி அப்செட்டாகி கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார்.இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக சமூக வலைத்தளத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருந்த அத்வானி நேற்று தனது அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அவருடைய அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று அவர் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Advani_
இதுதொடர்பாக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் தன் பதிவில்,”எனது பதினான்கரை வயதில் கராச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தது எனது வாழ்க்கையில் அர்த்தத்தை தேடி தந்துள்ளது.எனது வீடு மற்றும் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக கராச்சியில் முதலில் பிரசாரம் செய்தேன். நாட்டின் பிரிவினைக்கு பின்னர், ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன்.அதுதான் 55 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியல் வாழக்கையை தொடங்குவதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்தது. முதலில் பாரதீய ஜனசங்கம் அமைப்பிலும், பிறகு பாஜகவிலும் பணியாற்ற காரணமாக அமைந்தது. எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்று அத்வானி கூறியுள்ளார்.

இப்படி தனது வலைத்தளத்தில் மலரும் நினைவுகளை பதிவு செய்துள்ள அத்வானி, சமீபத்தில் முதுபெரும் எழுத்தாளர் குஷ்வந்த்சிங்கை சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2-ந் தேதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த முதிர்ந்த வயதிலும், இலக்கிய படைப்பில் ஆர்வத்துடன் உள்ள குஷ்வந்த்சிங்கை அவர் பாராட்டி இருக்கிறார்.

இதற்கிடையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அத்வானி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், டெல்லி மேல்-சபை தேர்தலில் அவர் போட்டியிடலாம் என்று நேற்று முன்தினம் தகவல் வெளியாகி இருந்தது. அதற்கு அடுத்த நாளில் அத்வானி வலைத்தளத்தில் இந்த கருத்தை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், மேல்-சபை தேர்தலில் அத்வானி போட்டியிடுவார் என்று வெளியான தகவலை பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் மறுத்து இருக்கிறார். வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடும் தொகுதியை அத்வானி தனது விருப்பப்படி தாராளமாக தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ராஜ்நாத்சிங் கூறி இருக்கிறார்.

At 86, Advani says his political career has not yet ended

******************************************************************
Ahead of Lok Sabha elections, veteran BJP leader LK Advani on Sunday said his political journey that started 55 years ago has not yet ended, indicating an active innings ahead.