October 18, 2021

எதைக்கண்டும் அஞ்சப்போவதில்லை! – ஜெயலலிதா அறிக்கை

“பொது வாழ்வில் ஈடுபடுவது எத்தகைய இடர்பாடுகளை தரும் என்பதை அரசியலில் நுழைந்த காலம் முதல் தெரிந்து வைத்திருக்கிறேன். இது போன்று எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பல சோதனைகளையும், வேதனைகளையும், தாண்டி வந்திருக்கிறேன். எதைக்கண்டும் மனம் தளரப்போவதில்லை. சோதனைகளை தாங்கும் உள்ளத்தை இறைவன் எனக்கு தந்திருக்கிறார். ” என்று ஜெயலலிதா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்
jaya oct 19
நேற்று மாலை 6 மணிக்கு பெங்களூரு ஜெயிலில் இருந்து சென்னை திரும்பிய ஜெ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் “நான் சிறை சென்ற போது என் மீது அளவற்ற பாசமும் அன்பும் வைத்து எனக்காக 193 பேர் உயிரை மாய்த்து கொண்டனர் என்ற துயர செய்தி கேட்டு நான் தாங்க முடியாத இன்னல் உற்றேன். யாரும் இனியும் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். இயக்க வளர்ச்சி பணியிங் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இது போல் எனது விடுதலைக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட தொண்டர்கள் , தோழமை கட்சியினர், மற்றும் தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனிடையே உயிர் நீத்த குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவியும். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்

மேலும் பொது வாழ்வு என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானது என்பதை நான் பொது வாழ்வில் ஈடுபடுவது எத்தகைய இடர் பாடுகளை தரும் என்பதை அரசியலில் நுழைந்த காலம் முதல் தெரிந்து வைத்திருக்கிறேன். இது போன்று எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பல சோதனைகளையும், வேதனைகளையும், தாண்டி வந்திருக்கிறேன். எதைக்கண்டும் மனம் தளரப் போவதில்லை. சோதனைகளை தாங்கும் உள்ளத்தை இறைவன் எனக்கு தந்திருக்கிறார். மேலும் தமிழக மக்களின் அன்பும், பேராதரவும் இருக்கும்வரை எதைக்கண்டும் அஞ்சப்போவதில்லை. உங்கள் ஆதரவு இருப்பதால் இதனை கொண்டு எதையும் எதிர்கொள்வேன்.

அ.தி.மு.க., என்ற பேரியக்கத்தை காத்திட தன்னை அர்ப்பணித்து கொள்ள வேண்டும் என்று புரட்சித்தலைவர் என்னிடம் பெற்றுக் கொண்ட சத்தியத்தை எனது இதயத்தில் நான் பதித்து வைத்திருக்கிறேன். இதனை ஏற்று எந்நாளும் அதன் வழியில் நடப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன். எந்த தியாகத்தையும் ஏற்று கொள்வேன் என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்”என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.