September 21, 2021

எச்எஸ்பிசி வங்கியிலிருந்து 25 ஆயிரம் ஊழியர்களுக்குக் கல்தா?!

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான எச்எஸ்பிசி உலகம் முழுவதிலும் உள்ள அதன் கிளைகளில் இருந்து 25 ஆயிரம் ஊழியர்களை வெளியே அனுப்ப முடிவு செய்திருக்கிறது. பிரிட்டனில் இருந்து மட்டும் இது 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் அவர்களுக்கு 2,66,000 ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்தில் மட்டும் 47,500 ஊழியர்கள் இருக்கிறார்கள். ஊழியர்களை குறைக்க இருப்பதால் அதன் கிளைகளின் எண்ணிக்கையையும் குறைய உள்ளது.
An HSBC bank branch logo is seen in central London
பிரிட்டனில் இப்போது அவர்களுக்கு 1,050 கிளைகள் இருக்கின்றன. அதில் 20 கிளைகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. இன்னுமொரு 20 கிளைகளை அது மூட திட்டமிட்டிருக்கிறது. துருக்கி மற்றும் பிரேசிலில் தங்களது வர்த்தகத்தை விற்றுவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடிவு இந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.