September 29, 2021

ஊழல்வாதிகளின் கழுத்தில் கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்!- போப் பிரான்சிஸ் பரபரப்பு பேச்சு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ தேர்வாகி. கடந்த மார்ச முதல் 266ஆவது போப்பாக பிரான்சிஸ் என்ற பெயருடன் அவர் பதவியேற்றுக் கொண்டார்.அந்த தலைமை பதவியேற்ற நாளில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வரும் பிரான்சிஸ் நேற்று முன்தினம் வாடிகன் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே தோன்றி சொற்பொழிவு ஆற்றினார்.அப்போது அவர்,” ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவர்களும், அதனை ஆலயத்திற்கு வழங்குபவர்களும் வெளிப்பார்வைக்கு வண்ணம் பூசப்பட்ட கோபுரங்களை போல காட்சியளிக்கின்றனர்.ஆனால் உள்ளுக்குள் எலும்பும், சதையுமாக அழுகி காணப்படுகின்றனர்.அப்படி ஊழல் செய்பவர்களை கல்லை கட்டி கடலில் வீச வேண்டும்”என போப் பிரான்சிஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
nov 14 -pope_
நேற்று வாடிகனில் பேசும் போது,”பைபிளின் புதிய ஏற்பாட்டில் உள்ள லூக்கா அத்தியாயத்தில் ஏமாற்றுவேலை இருக்கும் இடத்தில் கடவுளின் தூய ஆவி இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.எனவே தான், ஏமாற்றுக் காரர்களை பூமியில் விட்டுவைப்பதைக் காட்டிலும் அவர்களின் கழுத்தில் மைல் கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று இயேசு கிருஸ்து கூறியுள்ளார்.

நாட்டையும், மக்களையும் வஞ்சித்து ஊழலின் மூலம் பணத்தை கொள்ளையடித்து அதே பணத்தை தேவாலயங்களுக்கு நன்கொடையாக அளிப்பவர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்ட வாழ்க்கையை வாழ்பவர்கள்.அவர்கள் பாவிகள்.இயேசு கிருஸ்து கூறியது போல்,அவர்கள் கழுத்தில் பாறாங்கல்லை கட்டி கடலில் தூக்கி எறிய வேண்டும்.. ஊழல் செய்து பணம் சம்பாதித்து, அதனை தானமாக கொடுப்பவர்களும், அதனை ஆலயத்திற்கு வழங்குபவர்களும் வெளிப்பார்வைக்கு வண்ணம் பூசப்பட்ட கோபுரங்களை போல காட்சியளிக்கின்றனர்.ஆனால் உள்ளுக்குள் எலும்பும், சதையுமாக அழுகி காணப்படுகின்றனர்.

வாழ்நாள் எல்லாம் ஊழல் செய்து ஊதியம் தேடிக் கொள்பவர்கள் தங்களது சந்ததிகளுக்கு அழுக்கான உணவையே அளிக்கின்றனர். அவர்கள் கண்ணியமற்றவர்கள்.ஊழல் என்பது போதைப் பழக்கத்தை போல் கொடியது. ஊழல் செய்யாமல் வாழ முடியாத சூழ்நிலையை அது உருவாக்கி விடும்.ஊழல் செய்வதன் மூலம் கண்ணியத்தை இழக்கும் இவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தங்களுடன் கொண்டு செல்வதில்லை.கண்ணியத்தை இழந்தவர்கள் என்ற அவப்பெயரை மட்டும்தான் கொண்டு செல்கிறார்கள்.”என்று அவர் பேசினார்.

Pope Francis corruption fury: Tie them to a rock and throw them in the sea
****************************************************************************
Pope Francis delivered an impassioned sermon on Monday, during which he quoted a passage from the bible that said some sinners deserve to be tied to a rock and cast into the sea.The Argentinian religious leader said Christians who donated money to the church but stole from the state were leading a “double life” and were sinners who should be punished.