September 18, 2021

ஊர்லே ஒரு பிரச்னைன்னா கோயில்லே போய் முறையிடலாம்: அந்த கோயிலுக்கே பிரச்னைன்னா..?

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம் வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ் சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன. கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலை மதிப் பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் கோவில்களின் பாரம்பரியம் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் மீது, அரசு எடுக்க உள்ள நடவடிக்கையை தெரிவிக்கும்படி சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
edit sep 1a
ஆங்கில நாளிதழ் ஒன்றில், தமிழ்கத்தில் உள்ள பல் இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும், தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும் (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச் செய்கின்றர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகி விடுகிறது; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடுகிறது.வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படுகிறது.கரு வறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது, கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படுகிறது.எனவே பழமையான கோவில்களின் புராதனத்தை பாதுகாக்க, 17 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைக்கவில்லை’ என, செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில், ஹைகோர்ட் தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. சென்னை, திருவொற்றியூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலின் புராதன கட்டடத்தை பாதுகாக்க கோரி, புராதன பாதுகாப்பு சங்கமும் மனு தாக்கல் செய்தது.மேலும், ‘மத விழாக்கள், கோவில் செயல்பாடுகளில், அரசு தலையிடக் கூடாது; மகா கும்பாபிஷேகம் என்ற பெயரில், கோவிலின் புராதன மதிப்பை அழித்து விடக்கூடாது’ என கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கோவில்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தலைமையில் குழுவை நியமித்தது.இந்தக் குழு, மகாபலிபுரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் (வடிவுடை அம்மன்) ஆகியவற்றை பார்வையிட்டு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.

அனைத்து கோவில்களையும் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய, போதுமான நேரம் இல்லாததால், முக்கி யமான மூன்று இடங்கள் மட்டும், மாதிரியாக எடுக்கப்பட்டதாக குழு தெரிவித்துள்ளது. குழு அளித்த அறிக்கை யில், “இந்த கோவில்களில், தினசரி பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. கோவில்களில் மேற்கொள்ளப் படும் புனரமைப்பு, பழுது பார்க்கும் பணிகள் ஆகம விதிகளின்படி நடக்கவில்லை. எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப் பட்ட பழமைவாய்ந்த கற்கள் அகற்றப்பட்டு, ‘டைல்ஸ்’ கற்களாக மாற்றப்பட்டுள்ளன. ‘எனாமல்’ வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோபுரம் அருகில் தண்ணீர் தொட்டி, கோவில் வளாகத்தில், நிர்வாக அதிகாரிக்கான அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள், விதிகளின்படி நடக்கவில்லை”என்று கூறப்பட்டுள்ளது.
IMG_20131117_201419
இந்த அறிக்கையை பரிசீலித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:கோவில் புனரமைப்பு பணிகளில், நிபுணர்கள் இருந்தாலும் அவர்களிடம் ஆலோசிக்கவில்லை என குழு தெரிவித்துள்ளது.அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. எனவே, குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை அமல்படுத்துவதில் தடங்கல் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.விசாரணை அக்., 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தெளிவு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் விசாரணையின் போது, உடன் இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்; கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித் திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர் கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது என்கிறார்கள்