September 20, 2021

உலக செஸ் போட்டி : ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னை நேரு விளையாட்டு உள் மைதானத்தில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியபோது,1500 ஆண்டுகள் பழமையான செஸ் போட்டியின் பிறபிடம் இந்தியா,சென்னையில் உலக செஸ் போட்டி நடத்துவதற்கு ரூ. 29 கோடி ஒதுக்கப்பட்டது என்றும்,இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவின் செஸ் வீரர்களில் விஸ்வநாதன் ஆனந்த முதன்மையானவர் என்றும், தொடர்ந்து மூன்று முறை சர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்றவர் எனறும் குறிப்பிட்டார்.
nov 7 Chess - jaya MINI
உலக செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான இந்திய கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட்மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோர் மோதுகிறார்கள்.12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை நடத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போட்டியை ஜெயலலிதா இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில், 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்தும், நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென்னும் மோதுகிறார்கள்.இந்த போட்டி 12 சுற்றுகளை கொண்டது.12 சுற்றுகள் முடிவில் இருவரும் சம நிலை வகித்தால், சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் டைபிரேக்கர் போட்டி 28–ந் தேதி நடைபெறும். இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.14 கோடியாகும்.
nov 7 - chess.2
முன்னதாக் ஆனந்த், கார்ல்சென் ஆகியோரை அவரவர் நாட்டு கொடி அணிவகுப்புடன் சர்வதேச வீரர்களால் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வீணை காயத்ரியின் இசை நிகழ்ச்சி, நடிகை ஷோபனா மற்றும் ஊர்மிளா சத்யநாராயணா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கார்ல்செனின் சொந்த நாடான நார்வேயின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது..