September 20, 2021

உலக செஸ் சாம்பியன் பரிசளிப்பு விழா: கார்ல்சனுக்கு கோப்பையை வழங்கினார் ஜெ.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற நார்வே வீரர் கார்ல்சனுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கியதுடன் ஆனந்துக்கு ரூ.6.03 கோடி ரொக்கத்துடன் வெள்ளிப் பதக்கம் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
nov 25 - chess CARLSEN_
சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற 2013ஆம் ஆண்டிற்கான உலக சதுரங்க வாகையர் போட்டியில் வென்ற நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன்னுக்கு நீலகிரி மலைச்சரிவிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், 60 சதவீத பரிசுத் தொகையாக 9 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு வெள்ளிப் பதாகையும், 40 சதவீத பரிசுத் தொகையான 6 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கி பாராட்டினார்.முன்னதாக இப்போட்டிக்காக 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததோடு, போட்டியினைச் சிறப்பாக நடத்திட அனைத்து வழி காட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கினார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.