September 25, 2021

உலக சுகாதார தினம் – ஏப்=7

உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘சிறிய கடி, பெரிய அச்சம்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித் துள்ளது. அதாவது, கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய் களில் இருந்து நம்மை நாமே பாது காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.அதிலும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், கொசுக்களின் உற்பத்தி பெருகிவிட்டது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
world-health-day(1)
உலக மக்களின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பானது 1948ல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு அனைத்துலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணியை செய்யும் அதிகாரம் படைத்தது.
1950ம் ஆண்டு முதல் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்க உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவு, இயந்திரமயம், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்தில் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகளை தவறாமல் அளிக்க வேண்டும். தவறினால் பல்வேறு நோய்களால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். இளம் பருவத்தில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்துவிடுகிறது. எனவே போதை பொருள் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.

மேலும் இப்போது அதிகரித்துள்ள வெப்ப நிலையால் கொசுக்களின் முட்டைகள் வேகமாக பொறிந்து 7 நாட்களிலேயே கொசு வாக மாறிவிடுகின்றன. இத னால், கொசுக்களின் உற் பத்தி அதிகரித்துள்ளது. மக்கள் கொசுக்கடியால் அவதிப்படு கின்றனர். பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, கொசுக் களின் உற்பத்தியை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.அதே சமயம் தமிழகத்தில் மலேரியா பாதிப்பு குறைவாக இருக்கிறது. கிராமப் புறங்களை விட, நகர்ப் புறங்களில் வசிப்பவர்களே மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற பகுதியில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். அவர்கள் வேலை நிமித்த மாகவும் சிகிச்சைக்காகவும் தமிழகம் வருகின்றனர். அவர்களை கடிக்கின்ற கொசுக்கள், மற்றவர் களையும் கடிக்கிறது. அதன் மூலம், அவர்களிடமிருந்து மற்றவர் களுக்கும் மலேரியா பரவுகிறது. இதனை அரசு தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.
worldhealth day 2
டெங்கு, சிக்குன்குனியா மீண்டும் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல்தானா என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப் புள்ளது. எனவே, காய்ச் சலுடன் வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக் கான சிகிச்சையை கொடுக்க வேண் டும். மூளைக் காய்ச்சலுக்கு தடுப்பூசி இருப்பதால், மூளைக் காய்ச்சலை எளிதாக தடுத்துவிடலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.