October 19, 2021

உலக கோப்பைக் கிரிக்கெட்:புதிய விதிமுறைகள்!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலககோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை நடக்கிறது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எடுத்த ஆலோசனை யின்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.மேலும் கால் இறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படட மாட்டாது.
icc criket
அத்துடன் குரூப் ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதேபோல இறுதி ஆட்டம் ‘டை’யில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கோப்பை அளிக்கப்படும்.உலககோப்பையில் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.60 கோடியாகும்.
2011–ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய உலக கோப்பையில் மொத்தம் ரூ.48 கோடி பரிசு தொகை தான் வழங்கப்பட்டது.

2015–ம் ஆண்டு உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும். அதே நேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கோப்பையை வென்றால் ரூ.24 கோடி வழங்கப்படும்.

2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி,

அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடி,

கால் இறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்.