September 20, 2021

உலக கழிவறை தினம் – நவம்பர் 19

உலக அளவில் 260 கோடி நபர்கள் (உலக மக்கள் தொகையில் 40%)இப்போது கழிவறை உள்ளிட்ட அடிப்படை இல்லாமல் இருக்கிறார்கள்.இதில், 98 கோடி பேர் சிறுவர் & சிறுமியர்கள். இவர்கள் வயல்வெளிகள், ஆறு மற்றும் குளக்கரைகள், கடற்கரைகள்,தெரு ஓரங்களை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் பரவும்நோய்கள் கணக்கில் அடங்கா..! இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள கழிவறை தொடர்பான 15 அமைப்புகள் 2001ல் கூடி நவம்பர் 19 ஆம் தேதியை உலக கழிப்பறை தினம் என (World Toilet Day, November 19 ) அறிவித்தன.
nov 19 - toilet day
அதன் பிறகு ஆண்டு தோறும் உலக கழிவறை தின உச்சி மாநாடுநடத்தப்பட்டு வருகிறது. 2007 ல் இந்தியாவில் புதுடெல்லியில் இம்மாநாடு நடந்தது. அதில், ஆரோக்கிய இதில், சுகாதார துறைகல்வியாளர்கள், சுகாதார நிபுணர்கள், கழிவறை வடிமைப்பாளர்கள்,சுற்றுச் சூழலாளர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி ஒவ்வொரு கழிவறை அமைப்பும் தான் சார்ந்துள்ள நாடுகளில்தூய்மையான கழிவறைகளை உருவாக்க பாடுபட்டு வருகின்றன.

முன்னதாக் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் சிங்கப்பூர் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி மார்க் நியோ பேசுகையில், உலக கழிவறை தினத்தை ஐ.நா அறிவிக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார். இந்த யோசனையை பலரும் கேலி செய்வார்கள் என்பதும் தெரியும்.ஆனால் பொருட்படுத்த மாட்டேன் என்றும கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “உலகளவில் சுகாதாரமற்ற கழிவறைகள் பற்றியும், சுகாதாரத்தை பேணுவது தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ள கழிவறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் 250 கோடி மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லை. இவர்களில் 110 கோடி மக்கள் திறந்தவெளியை கழிவறைகளாக பயன்படுத்துகின்றனர். தகுந்த கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை காப்பாற்ற முடியும். கழிவறை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய எங்கள் நாட்டுக் குடிமகனான ஜாக் சிம்மை, நாங்கள் மிஸ்டர் டாய்லெட் என்று அழைக்கிறோம்” என்றார்.

இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியசன் சிங்கப்பூரின் நடவடிக்கையை பாராட்டியதுடன், தகுந்த சுகாதாரமே உயர்மதிப்பை பெற்றுத் தருகிறது என்றார்.தொடந்து நவம்பர் 19-ஆம் தேதியை உலக கழிவறை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பண்டைய காலங்களில் மக்கள் தங்களுடைய காலை கடன்களை வெளிப்புறங்களில் கழித்து வந்தனர். நாகரிகம் உயர்ந்த பிறகு ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தி குழி கக்கூஸ் ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. கக்கூஸ் என்று சொல்லக் கூடிய டாய்லெட், பின்னர் பீங்கானால் ஆன கோப்பைகளாக மாறின, பிரபலமாயின. வயதானவர்களும் நோயாளிகளும் பயன்படுத்தும் பொருட்டு உட்கார்ந்து கொண்டே மலம் கழிக்கும் விதத்தில் புதிய கோப்பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு ஐரோப்பிய டாய்லெட் அல்லது வெஸ்டர்ன் டாய்லெட் என்று பெயர். பேண்ட், சூட் போட்டிருப்பவர்கள் பேண்டை முழுவதுமாக கழட்டாமல் சிறதளவு கழட்டி விட்டு அப்படியே அமருவதற்கு வசதியாக இருந்ததால் அது சந்தையில் அணி வகுத்தன. பேண்ட் அணியும் பெண்களுக்கு இது வசதியாக இருந்தது. இதுவே தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

இது நமது நாட்டில் அதிகமாக பழக்கத்திற்கு வராததால் அதில் எப்படி அமர்வது என்றே அதிகமானோருக்கு தெரிவதில்லை. இரண்டாவதாக பயன்படுத்தியவர்கள் அதை சுத்தம் செய்யாமல் போய்விடும் பொழுது அடுத்து வருபவர் அவசரம் காரணமாக அதிலேயே அமர்ந்து விடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. அது மட்டுமின்றி சிலர் நின்று கொண்டே மூத்திரம் பெய்யும் பொழுது அடுத்து வருபவர் நோயை இலவசமாகவே பெறுகிறார். இந்த ஐரோப்பிய டாய்லெட்டுகளை பயன்படுத்துபவர்களை அதிகமாக நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அமரும் பகுதியில் அதன் மீது துணியோ பேப்பரோ விரித்து விட்டு அமர்வது நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

நம்முடைய தேவை முடிந்து விட்டதல்லவா என நினைத்து முறையாக தண்ணீர் ஊற்றாமல் செல்லக் கூடாது. ஒவ்வொருவரும் பயன்படுத்திய பிறகு தாங்களாகவே சுத்தம் செய்யும் போது அது பிறருக்கு அருவருப்பை தராது. பின்னர் வருபவர்களும் அதை பார்த்து சுத்தம் செய்து விட்டு செல்வர்.

அடுத்ததாக நாம ஏற்கனவே குறிப்பிட்ட போல அதில் எப்படி அமர்வது என தெரியாதவர்களும், அமரும் பகுதி அருவறுப்பாக இருப்பதாலும் சிலர் அதன் மீது ஏறி அமர்கின்றனர். இது எத்தனை பெரிய ஆபத்து என்பதை அவர்கள் உணர்வதில்லை. கால்களை தரையில் வைத்து அமரும் விதத்தில் குறைந்த அளவு எடையை தாங்கும் விதத்தில் தான் அந்த கோப்பைகள் வடிவமைக்கபட்டுள்ளன. அதன் மீது ஏறி அமர்ந்து முழு எடையையும் தாங்கும் அளவிற்கு அது தயாரிக்கப்படாததால் எளிதில் அது உடைந்து விடுகிறது.

மேலும் தண்ணீர் எப்பொழுதும் அதில் பயன்படுத்ததப்படுவதால் அது விரைவிலேயே பலம் குன்றி விடுகின்றது. அதன் காரணமாக அதன் மீது ஏறும் போதே இறங்கும் போதோ அது உடைந்து விடுகிறது. எனவே அதன் மீது ஏறுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதன் மீது ஏறி அமர்ந்ததால் அது உடைந்த அந்த பீங்கானால் கால்களில் மிகப்பெரிய அளவில் காயமடைந்த இந்த படத்தை பார்த்த பிறகாவது அதில் கவனம் செலுத்துவது நல்லது.

 

கிளிக் ::http://www.youtube.com/watch?v=Di_ugvNXjgs