September 27, 2021

உலக அளவில் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் டிமென்சியா! – எச்சரிக்கை ரிசல்ட்

2015ம் ஆண்டு நிலவரப்படி, டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட டாப் 10 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சீனா முதல் இடத்திலும் (9.5 மில்லியன்), அமெரிக்கா (4.2 மில்லியன்) 2வது இடத்திலும், இந்தியா (4.1 மில்லியன்) 3வது இடத்திலும், ஜப்பான் (3.1 மில்லியன்) 4வது இடத்திலும், பிரேசில் (1.6 மில்லியன்) 5வது இடத்திலும், ஜெர்மனி (1.6 மில்லியன்) 6வது இடத்திலும், ரஷ்யா (1.3 மில்லியன்) 7 வது இடத்திலும், இத்தாலி (1.2 மில்லியன்) 8 வது இடத்திலும், இந்தோனேஷியா (1.2 மில்லியன்) 9வது இடத்திலும், பிரான்ஸ் (1.2 மில்லியன்) 10 வது இடத்திலும் உள்ளன. இந்த டிமென்சியா’ பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில்,”டிமென்சியா’ என்பது குறிப்பிட்ட வகை நோய் அல்ல. மனிதனின் மூளைளை பாதிக்க கூடிய அறிகுறிகளே இது. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனிதனின் சிந்திக்கும் ஆற்றல், சிதைவுறும். டிமென்சியா பாதிப்பிற்கு ஆளாகும் நபர்கள்,தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் ஆகியவற்றை இழக்கின்றனர்’ என்கின்றனர்.
health aug 27
இன்றைய நிலையில், உலக அளவில் அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது உலக அளவில் 46.8 மில்லியன் பேர் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி, அல்ஜீமர் உள்ளிட்ட நோய்களின் மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4.1 மில்லியன் பேர் இந்தியர்கள். டிமென்சியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030 ல் 74.7 மில்லியன் பேரும், 2050ல் 131.5 மில்லியன் பேரும் உலக அளவில் டிமென்டியா நோயால் பாதிக்கப்படுவார்கள்.

இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் 9.9 மில்லியன் பேர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதாவது ஒவ்வொரு 3.2 விநாடிக்கு ஒருவர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார். 2015ம் ஆண்டு கணக்கீட்டின்படி கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே மனநல பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். கிழக்கு ஆசிய நாடுகளில் 9.8 மில்லியன் பேரும், மேற்கு ஐரோப்பாவில் 7.4 மில்லியன் பேரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ஆசிய நாடுகளில் 5.1 மில்லியன் பேருக்கும், வட அமெரிக்காவில் 4.8 மில்லியன் பேருக்கும் மனநல பாதிப்பு உள்ளது.

ஆசிய நாட்டினரே மனநல பாதிப்புக்கு அதிகம் ஆளாவதால் 2050ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் மனநலபாதிப்புக்கு ஆளாவார்கள் என்ற தகவலும் அந்த ஆய்வு அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது