September 20, 2021

உலகின் முதல் சூரிய சக்தி கழிப்பறை!- இந்தியாவில் அறிமுகம்

சூரிய சக்தி உதவியுடன் இயங்கக்கூடிய உலகின் முதல் வறண்ட கழிப்பறையின் மாதிரி இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கழிவறைகளுக்கு ஒரு புதிய வடிவம் கண்டுபிடிக்கும் திட்டத்தின் கீழ் 7,77,000 டாலர் நன்கொடையில் இந்தப் புதிய கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது. இது நீரின் தேவையின்றி சூரிய சக்தியின் உதவியுடன் மனிதக் கழிவுகளை அதிக வெப்பத்தில் நுண்ணிய கரியாக மாற்றும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் நுண்ணிய கரி பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், பசுமை வாயு எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட கார்பன் டை ஆக்சைடைத் தயாரிக்கவும் பயன்படும் என்று குறிப்பிடப்படுகின்றது.
solar_powered_toilet_
சுற்றுச்சூழல் நட்புறவினை வெளிப்படுத்தும் இந்தத் திட்டம் உலகளவில் பாதுகாப்பான மற்றும் நிலையான சுகாதாரம் கிடைக்கப் பெறாத 2.5பில்லியன் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று இந்தத் திட்டத்தின் முக்கிய ஆய்வாளரும், கொலொராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கார்ல் லிண்டன் கூறியுள்ளார்.

திட மற்றும் திரவ கழிவுப் பொருட்களை சுத்தப்படுத்தாமல் பயனுள்ள இறுதிப் பொருட்களாக உருவாக்கக்கூடிய இந்த கழிவறைகள் அடுத்த தலைமுறையினருக்கானது என்றும் லிண்டன் குறிப்பிட்டார். தற்போதைய கண்டுபிடிப்பு ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறு பேருக்கு உபயோகமானதாக இருக்கும். இதேபோல் குறைந்த செலவில் மேம்படுத்தப்பட்ட நிலையில் பல குடும்பங்களுக்குப் பயனளிக்ககூடிய வடிவமைப்புகள் தங்களது தயாரிப்புத் திட்டத்தின் கீழ் இருப்பதாக அவர் கூறினார்.

Solar Toilet Turns Your Waste Into Something Worthwhile
*****************************************************************************
Most people probably don’t think of recycling the things they flush down the toilet. Karl Linden, a professor of environmental engineering at the University of Colorado, thinks that doesn’t have to be the case.Thanks to a couple of mirrors and fiber-optic cables, Linden is turning feces and urine into biochar, a small black chunk of material that can be used like a charcoal briquette.”It can be used for cooking,” he told ABC News. “Or you can put it in the soil so that it better retains nutrients. There’s a lot of agricultural benefits.”