September 20, 2021

உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைக்க முயற்சி !

இந்தியாவின் இளம் மலையேற்ற வீராங்கனைகளில் மிகவும் பிரபலமானவர் ஜானவி ஸ்ரீபெரம்புதுரு. ஐதராபாத்தை சேர்ந்த இவர் உலகின் ஏழு உயரமான சிகரங்களையும் ஏறி பிரம்மாண்ட உலக சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
jaahnavi-
ஏற்கனவே, 5,642 மீட்டர்கள் உயரம் கொண்ட ஐரோப்பாவின் மிக் உயரமான மவுண்ட் எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்து கடந்த ஜூலை 31-ந்தேதி உலக சாதனை படைத்திருந்தார். அதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி 5,895 மீட்டர்கள் உயரம் கொண்ட ஆப்பிரிக்காவின் மிக உயரமான மவுண்ட் கிளிமஞ்சரோ சிகரத்தில் ஏறி உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

உலகின் மிக உயரமான 7 சிகரங்களில், 2-ல் ஏறி உலக சாதனை நிகழ்த்திவிட்டார். மீதமுள்ள 5 சிகரங்களிலும் ஏறி புதிய உலக சாதனை படைக்க வேண்டும் என தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஜானவி. ஆசியாவின் மவுண்ட் எவரெஸ்ட், ஆஸ்திரேலியாவின் மவுண்ட் கொஸியூஸ்கோ, தென் அமெரிக்காவின் மவுண்ட் அகோன்கவுவா, அண்டார்டிகாவின் மவுண்ட் வின்சன் மாசிப், வட அமெரிக்காவின் மவுண்ட்.டெனாலி ஆகியவையே அந்த 5 சிகரங்கள்.

இந்த தகவலை ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜானவி தெரிவித்தார்.