September 23, 2021

உலகின் அதிவேக லிஃப்ட் அறிமுகம்,,,!

பல பேர் அடுக்கு மாடி குடியிருப்பி வசிப்பீர்கள். மூணு மாடி அடைய நாலு நிமிஷம் கூட ஆகும் சில லிஃப்ட்டுக்கு – ஆப்பரேட்டர் லிஃப்ட் இன்னும் ஸ்லோமோஷன்ல போகும் அதுல இருக்கும் ஆப்பரேட்டர் இன்னும் போர் – இதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் உலகத்தின் அதிவேக லிஃப்ட்டை கண்டுபிடித்திருக்கின்றனர்.
ravi - apr 24
இதில் மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகை. அதாவது இதை முதன் முதலில் ஹாங்காங் அருகே இருக்கும் சைனா பார்டரில் உள்ள கோன்ச்சாவு நகரத்தில் ஒரு உயர்ந்த மாளிகை வர இருக்கிறது. இதன் பெயர் CTF Finance Centre. இதன் உயரம் 95 மாடிகள். இந்த லிஃப்ட்டை முதன் முதலாய் இங்கு தான் இன்ஸ்டால் செய்ய போகிறது ஹிட்டாச்சி நிறுவனம். இதன் மூலம் இந்த 95 மாடிகள் அடைய வெறும் 43 வினாடிகள் தானாம்.

இதில் ஒரு பெர்மனன்ட் மேக்ன்ட் மோட்டார் இருப்பதால் டக்கென்று வேகம் எடுக்கும் வகையிலும் அதே நேரம் கேபிள் அறுந்தாலும் அது விபத்து ஏற்படாமல் இருக்கும் வகையிலும் பாதுகாப்பாக அமைக்கபட்டிருக்கிறது. உங்களுக்கான அடுத்த சந்தேகம் நம்மூர் லிஃப்ட் ஸ்பீடே காது அடைக்குது இதுல இந்த ஸ்பீடு காது ஜவ்வை கிழிக்காதானு கேட்டா – நோ நோ – அதுக்கு லிஃப்ட்டுக்குள் ஏர் பிர்ஷர் கன்டிஷனர் மற்றும் கொஞ்சம் கூட வைப்ரேஷனே இல்லாமல் செல்லும் வகையில் சூப்பர் மேட்டர்.

இதன் ஆங்கில ஜர்னல் இங்கே………..http://www.hitachi.com/New/cnews/month/2014/04/140421.html