உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் டில்லி ஐ.ஐ.டி.,க்கு 222வது “ரேங்க்’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
sep 11 - university rank
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘குவாகுரேலி சைமண்ட்ஸ்’ என்ற நிறுவனம் கடந்த 2004ல் இருந்து உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து ஆண்டுதோறும் தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக நேற்று பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.இதில் அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப பல்கலை இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலை இரண்டாவது இடத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலை, மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன. அதே சமயம் முதல் 200 இடங்களில் இந்திய பல்கலைகளில் ஒன்றுக்கு கூட இடம் இல்லை.டில்லி ஐ.ஐ.டி., 222வது இடம் பிடித்துள்ளது. மும்பை, ஐ.ஐ.டி.,க்கு, 233வது இடமும், சென்னை, ஐ.ஐ.டி.,க்கு 313வது இடமும் கிடைத்துள்ளன.

ஆசிய நாடுகள் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் சீன பல்கலைகள் அதிகம் இடம் பிடித்துள்ளன.ஆசிய அளவில் ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலை, ஹாங்காங் பல்கலை ஆகிய இரண்டும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. சியோல் தேசிய பல்கலை மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

டில்லி, ஐ.ஐ.டி., 38; மும்பை, ஐ.ஐ.டி., 39; சென்னை, ஐ.ஐ.டி., 49; கான்பூர், ஐ.ஐ.டி., 51; காரக்பூர், ஐ.ஐ.டி., 58; ரூர்க்கி, ஐ.ஐ.டி., 66 மற்றும் டில்லி பல்கலைக்கு 80வது இடமும் கிடைத்துள்ளன.ஆசியாவில், சீனா, தைவான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைகள் அதிக இடங்களை பிடித்துள்ளன.

இதற்கிடையில் இந்தியாவில் நாடு முழுவதும் 600க்கும் அதிகமான பல்கலைகள் உள்ளன. மேலும் மத்திய அரசு இங்குள்ள உயர் கல்விக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறது. இருந்தபோதும் உலகளாவிய தர வரிசையில் முதல் 100 அல்லது 200 இடங்களில் கூட ஒரு பல்கலையும் இடம் பெறாதது பல்வேறு நிலைகளிலும் அப்செட்டை அளித்துள்ளது.

India missing from top global universities ranking
*******************************************************************
A ranking of the world’s top 200 universities by one of the world’s foremost educational rankings companies doesn’t have a single university from India.