October 25, 2021

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்ற ‘செல்பேசிக் கணிமை 2016 ‘– தொடக்க விழா!

உத்தமம் என்றழைக்கப்படுகின்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் கூட்ட அரங்கில் செல்பேசிக் கணிமை 2016 என்னும் பொருண்மையில் பன்னாட்டு பயிலரங் கத்தின் தொடக்க விழா 05.02.2016ஆம் நாள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.தொடக்க விழா விற்கு முனைவர் நாகராசன் தலைமை தாங்கினார். திரு லோகசுந்தரம் முன்னிலை வகித்தார். உத்த மத்தின் தலைவர் இனியநேரு வரவேற்புரை ஆற்றினார். பன்னாட்டு பயிலரங்கின் நோக்கங்களை உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி எடுத்துரைத்து அறிமுகவுரையாற்றினார். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநர் முனைவர் தனலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.
CELL FEB 5 C
இதில் திரு. இளங்கோவன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரை யாற்றினார். திரு. பால சுப்பிரமணியம் குறுஞ்செயலி உருவாக்கத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பிரபல பத்திரிக்கையாளர் ஆழி.செந்தில்நாதன் தமிழ்க் குறுஞ் செயலிகளின் சந்தை மற்றும் வேலை வாய்ப்புகள் என்னும் தலைப்பில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மைக்ரோ சாப்ட் நிறுவனம் சார்ந்த திரு. வெங்கடரங்கன் செல்பேசியில் பதிப்பங்கள் சந்தை மற்றும் வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். எழுத்தாளர் என்.சொக்கன் தமிழ் ஆர்வலர் களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அலைபேசிகளில் ஒளியுணரிகளை (OCR) இணைப்பது குறித்துப் பேசினார்.

இறுதியில் உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் முனைவர் துரை மணிகண்டன் நன்றியுரை வழங் கினார். இந்த விழாவில் இலங்கையிலிருந்து சிவாஅனுராஜ், மலேசியாவிலிருந்து கிங்ஸ்டன், உத்த மத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முனைவர் தி.நெடுஞ்செழியன், பன்னிருகை வடிவேலன், இல. சுந்தரம், அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், பேராசிரியர்கள் காமாட்சி, பத்மநாபபிள்ளை, சிதம்பரம், பிரிசில்டா, கீதா, இரமேஷ் சாமியப்பா, ஆரோக்கிய செல்வி, , செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முருகசுவாமிநாதன், அகிலன் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்ந்தவர்கள், அண்ணாப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் என சுமார் 100 பேர் இத் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.நாளை (06.02.2016) காலை முதல் மாலை பேராளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றது.

இப் பயிற்சியினை செல்வ முரளி, லோகேஷ்குமார், ஜி.வி.முத்துக்குமார், நாகராசன் ஆகியோர் செல்பேசி கணிமை குறித்து பயிற்சிகளை வழங்குகின்றனர். பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிறைவு விழாவில், தமிழ்க் கல்விக் கழகத்தின் இயக்குநர் உதயச்சந்திரன் மற்றும் இலண்டன் பேராசிரியர் சிவாப்பிள்ளை அவர்கள் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட குறுஞ்செயலிகளை வெளியிட்டு உரையாற்றுகின்றனர்.