உறவுகளின் உணர்வுகளைச் சொல்லும் ‘சேது பூமி’!-ஆல்பம்

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்கும் படம் ‘சேது பூமி’ தமன் இப் படத்தில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சமஸ்கிருதி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, ராஜலிங்கம், ஜுனியர் பாலைய்யா, சேரன்ராஜ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தவசி மற்றும் பலர் நடிக்க, தாய்மாமன் வேடத்தில் இயக்குநர் கேந்திரன் முனியசாமி நடித்துள்ளார்.’அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இப்படத்தை இயக்குகிறார். எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய் கிறார். பாரதி, மோனீஸ் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். பிறப்பும் இறப்பும் இறைவன் கையில். அதை நாம் கையில் எடுத்தால் என்ன நடக்கும் என்பதே கதை என்கிறார் இயக்குநர்.


படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கான வேளைகளில் இறங்கியுள்ள தயாரிப்பாளர் எம்.ஏ. ஹபீப் பிடம் படம் குறித்துக் கேட்கையில், “சேது பூமி, கண்டிப்பாக ஒரு வெற்றிப் படம் தான். தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பாகச் சொல்லியிருக்கும் இப்படத்தில் வெற்றிக்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. காதல், ஆக்ஷன், காமெடி என்று மக்களுக்குப் பிடித்த வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்க்கை, அவர்களது நட்பு போன்றவற்றை ரொம்ப எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம். ஒரு நேர்மையான படத்தை நேர்மையான முறையில் தயாரித்துள்ள மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

திரைப்படம் தயாரிப்பதை பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக நான் ஆரம்பிக்கவில்லை. இப்படத்தின் இயக்குனர் கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரை நான் ஒரு வேலைக்காக அழைத்த போது, அவர், சினிமா தான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன், என்று என்னிடம் கூறினார். சரி தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும். இப்படி சினிமாவுக்காக கஷ்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன்” என்றார் எம்.ஏ.ஹபீப்.

‘சேது பூமி’ பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.