September 26, 2021

உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறுவதோடு இதயநோய் தாக்கத்திலிருந்து காக்கும் ஃபுட்ஸ்!!

ஒருசில இயற்கையான எளிய பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் உங்களுடைய உபாதைகளைக் குறைக்கக்கூடும் :
health jan 18
கற்றாழைச்சாறு: நிறைய வைட்டமின், தாதுப்பொருட்கள், அமினோ ஆசிட், என்ஸோம்கள் அடங்கியது. குடல் பகுதியைச் சுத்தப்படுத்தி பசியை நன்றாகத் தூண்டிவிடும். இதயநோய் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ஸ் (ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்) நோய் எதிர்ப்புசக்தியை நன்றாக வளர்க்கக் கூடும். காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி லிட்டர் கற்றாழைச்சாறு குடிப்பதால் உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தித் தரும்.

நெல்லிக்காய் சாறு: இதிலுள்ள விட்டமின் சி சத்தானது உடலில் எளிதில் சேருகிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மூச்சிரைப்பு உபாதையால் கஷ்டப்படுபவர்கள், Scurvy எனும் தோல் உபாதையிலும் மலம் இளகிப்போகும் அவஸ்தையிலும் நெல்லிக்காய் சாறு ஓர் அருமருந்தாகப் பயன்படும். உடல் உறுப்புகள் அனைத்தும் நெல்லிக்காய் சாறினால் வளம் பெறுகின்றன. தினமும் உணவில் 2 – 3 நெல்லிக்காய் சேர்த்து வரவும்.

ஆப்பிள் பழம்: இதிலுள்ள Quercetin எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட், உடலிலுள்ள அணுக்களைப் பாதிக்கும் ஒருசில ஆக்ஸிஜன் Moleculesகளைத் தடுக்கிறது மற்றும் இந்தப் பழத்தில் அடங்கியுள்ள Pectin குடல் பகுதியில் வேலை செய்கிறது. மற்றும் கல்லீரலிலிருந்து உற்பத்தியாகக் கூடிய கொழுப்பைக் குறைக்கிறது. 3 கிராம் அளவில் நீரில் கரையக் கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து ஆப்பிளில் அடங்கியிருப்பதால் நல்ல ஆரோக்கியத்தை மனிதர்களுக்கு மேம்படுத்தித் தரும்.

சர்க்கரை பாதாமி (Apricots): இதில் அடங்கியுள்ள carotenoids, beta carotene and lycopene ஆகியவை LDL எனும் கெட்ட கொழுப்பை இரத்தத்தில் நீர்க்கச் செய்து வெளியேற்றும் தன்மையுடையது.
மருதம்பட்டை: 8 மணிநேரம் சிறிது மருதம்பட்டையை தண்ணீரில் ஊற வைத்துக் குடிப்பதால் இதயநோய்களின் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படும்.

தண்ணீர்விட்டான்கிழங்கு: இதில் அடங்கியுள்ள Folate இரத்தத்தில் உள்ள ஏர்ம்ர்ஸ்ரீஹ்ள்ற்ங்ண்ய்ங் Homocysteine (an amino acid) ஐக் குறைப்பதால் பிராண வாயுவை ஏந்திச் செல்லும் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் மேம்படும். மிகவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்ததொரு கிழங்காகும்.

பார்லி: இதில் அடங்கியுள்ள Tocotrienols மற்றும் Lignans இரத்தக்கட்டு ஏற்படும் தன்மையைக் குறைக்கிறது மற்றும் அதில் அடங்கியுள்ள Beta glucan கொழுப்பைக் குறைக்கிறது.

பீட்ரூட்: இந்த காயில் அடங்கியுள்ள Carotenoids, Flavonoids ஆகியவை LDL எனும் கெட்ட கொழுப்பை இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. இரத்தக்கொதிப்பை பீட்ரூட் குறைப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாதவாறு பாதுகாக்கக் கூடும். இதற்குக் காரணம் அதிலுள்ள நைட்ரேட்ஸ் எனும் ரசாயனம் நைட்ரிக் ஆக்ஸேட் எனும் வாயுவாக இரத்ததில் மாறுவதால் இரத்தக்குழாய்களை விரிவாக்குகிறது. நீங்கள் இதை சிறிய அளவில் மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

பாகற்காய்: இயற்கை அன்னை அளித்த ஒரு வரப்பிரசாதம் இது. இதிலுள்ள Insulin like peptides, alkaloids, charantin ஆகியவை ஒன்று சேர்ந்து இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரை அளவையும் நன்றாகக் குறைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். அதிலுள்ள cellulose எனும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்பையும் நன்றாக குறைத்துவிடும். ப்ரோக்கோலி (Broccoli): Beta carotene, sulforaphane, Vitamin C, folate, Calcium ஆகியவை நிறைந்த இந்த உணவுப்பொருள் இதயநோய் வராமல் எதிர்த்துப் போராடக் கூடியது.

மேற்குறிப்பிட்டதுபோல பல தரப்பட்ட சத்துகள் நிறைந்த முட்டைகோஸ், காலிஃப்ளவர், லவங்கப்பட்டை, ஓமம், முட்டை வெள்ளைக்கரு, வெந்தயம், பூண்டு, வெங்காயம், ஓட்ஸ், ஆரஞ்சுப்பழம், பப்பாளிப்பழம், பச்சைப்பட்டாணி, பேரிக்காய், மிளகு, மாதுளம்பழம், பழுப்பு அரிசி, சோயா பீன்ஸ், முளைகட்டிய தானியங்கள், மஞ்சள்தூள், இஞ்சி, வெந்தயக்கீரை, வெங்காயத்தாள் கீரை, சீமைப்பூசணி, தக்காளிப்பழம், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை நீங்கள் உணவில் தாராளமாகச் சேர்த்து உங்களுடைய உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறுவதோடு இதயநோய் தாக்கம் ஏற்படாதவாறும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ராஜேஷ்கண்ணா