October 16, 2021

உதட்டில் தொடர்ந்து 10 நொடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள்!

முத்தம் என்ற வார்த்தையை முன்பெல்லாம் பேசுவதற்குக்கூட அச்சப்பட்டனர். இன்றைக்கு அன்பின் வெளிப்பாடாக முத்தம்தான் திகழ்கிறது. முத்தம் என்பது ஆன்மாக்களின் சங்கமம். முத்தமிடுவதன் மூலம் இறுகலான முகத்தசைகள் இளகுகின்றனவாம். முத்தம் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலான தம்பதிகள் இடையேயான தாம்பத்ய உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.\இந்நிலையில் உதட்டில் தொடர்ந்து 10 நொடிகள் முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகிறதாம்,
kiss bacteria
இது குறித்து வெளியான தகவல்படி ‘மனிதனின் வாயிலும், உமிழ் நீரிலும் 700 வகையான பாக்டீரியாக்கள் (நுண்ணுயிர்கள்) இருக்கின்றன. ! உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்பு மிகவும் அதிகம். எந்த அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் முத்தத்தின் மூலம் பரவுகின்றன என்பதை அறிய அறிவியல் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்கென்று 21 தம்பதிகளை தேர்ந்தெடுத்து, நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர்; எவ்வளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.இதில், ஒருவரின் வாயிலிருந்து மற்றவர்களுக்கு 8 கோடி பாக்டீரியாக்கள் செல்வதாக தெரியவந்துள்ளது!!!!.