September 18, 2021

உடல் உஷ்ணத்தை கண்காணிக்கும் நவீன பேட்ச்!

பெரியவர்களுக்கு காய்ச்சல் வந்தாலே கொஞ்சம் சிரமம் தான் அதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் ரொம்பவும் கஷ்டம். அந்த அவஸ்தையை குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது மற்றும் சில குழந்தைகளுக்கு என்ன வகை காய்ச்சல் என்பதை கண்டுபிடிக்கவே பல நாட்கள் ஆகும். அப்படியே மருத்துவரிடம் சென்று அந்த குழந்தையை காண்பித்து காய்ச்சலுக்கு மருந்து வாங்கினாலும் மருத்துவர் கூறும் அறிவுரை இதாகத்தான் இருக்கும். டெம்ப்ரச்சேர் அடிக்கடி செக் பண்ணுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்காணியுங்கள் ஏதாவது மாறுதல் இருந்தா உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் என்பதாகும்.
ravi 8
ஆனால் குழந்தை பெரும்பாலும் தூங்கும் குணம் உடையதால் அதை ஒவ்வொரு மணி நேரமும் எழுப்பி வாயில் தெர்மாமீட்டரை வைக்க முடியாது அப்படியே செய்தாலும் அந்த குழந்தை அதற்கு பிறகு தூங்குவதும் கடினம். இதையெல்லாம் போக்கும் வண்ணம் அமெரிக்காவில் இன்று முதல் TempTraq என்னும் புது வகை 24 மணி நேரமும் உடல் உஷ்ணத்தை கண்காணிக்கும் ஒரு பேட்ச் வந்துள்ளது.

இதை குழந்தைகளுக்கு கையின் அடியில் ஒட்டிவிட்டால் போதும் அந்த குழந்தையின் உஷ்ணத்தை 24 மணி நேரமும் நம்முடைய மொபைலில் தொடர்ந்து காட்டி கொண்டே இருக்கும் அது போக ஆபத்தான நிலைமைக்கு போனால் உடனே உங்களுக்கு அலாரமும் அடிக்கும். இதன் விலை வெறும் 1250 ரூபாய்கள் தான் மற்றும் இதனை கண்காணிக்கும் ஆப்ஸ் இலவசம்.

இந்த செயல்முறை விளக்க வீடியோவை பாருங்கள்.

New tech to monitor fever in your mobile