October 16, 2021

உடலை தானமாக வழங்குவதாக அறிவித்த இயக்குனர் விக்ரமன்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது. விழாவில் கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், A.C.சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் படிக்க இயக்குனர் சங்க உறுபினர்களின் பிள்ளைகள் படிக்க இன்ஜினியரிங் கல்லூரியில் மூவரும் இணைந்து தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.
vikraman may 6
கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 சீட்டுகள், A.C.சண்முகம் 20 சீட்டுகள், ஐசரிகணேசன் 20 சீட்டுகள் என்று மொத்தம் அறுபது சீட்டுகள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

மற்றும் விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.