உங்கள் குழந்தையின் முதல் ‘கக்கா’வை வைத்து கொயந்தை மேதையா? மக்கா? என்று அறியலாமே!?

பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது. அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம். இந்தத் தகவல் உஙக்ளுக்கு கொஞ்சம் நம்பிக்கை யின்மையக் கொடுத்தாலும் இருந்தாலும், இது தான் உண்மை. போன நூற்றாண்டில் மருத்துவ வசதி என்பதே இல்லாத காலத்தில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தொடர்ந்து அடிக்கடி மலம் கழித்து கொண்டிருந்தால், அப்பகுதியில் உள்ள கிராம மருத்துவச்சிகள் அந்த மலத்தின் துளியளவை எடுத்து, தங்கள் நாக்கு நுனியில் சில நொடிகள் வைத்திருந்து, அந்த மலத்தின் சுவையின் மூலம் எந்த வகை பாதிப்பால் இப்படி குழந்தைக்கு பேதி போல் தொடர்ந்து மலம் வெளியாகிறது? என்பதை தங்களது அனுபவத்தால் அறிந்து, அதற்கேற்ற மருத்துவத்தை அவர்கள் சொன்ன காலம் ஒன்றுண்டு.
i q child july 15 a
தாய்க்கு ஏற்பட்ட மாந்தம் தீருவதற்கான கைமருந்துகளை அவர்கள் தருவார்கள். சிலவகை உணவுகளை ஒதுக்கும்படியும் அவளுக்கு அறிவுரை கூறுவார்கள். அது, அந்தக் காலம்…பிறந்த குழந்தையின் எதிர்கால அறிவுத்திறன் எப்படி இருக்கும்? அது, அதிமேதையாக வளர்ந்து பெற்றோருக்கும், பிறந்த தாய்நாட்டுக்கும் நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தருமா..? அல்லது, வாழ்ந்ததற்கான அடையாளமே தெரியாமல், அடிமுட்டாளாகிப் போகுமா…? என்ற முன்விபரத்தை பிறந்த குழந்தை முதன்முதலாக கழிக்கும் மலத்தை பரிசோதிப்பதன் மூலம் வெகு துல்லியமாக கணித்து விடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர் என்பதுதான் ஹைலைட்

பெரும்பாலும் குழந்தைபிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.

குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும். பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.

இதனிடையே அமெரிக்காவில் 1990-ம் ஆண்டுகளில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து பல வகைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் மேலை நாடுகளில் கருவுற்ற பெண்களில் பலர், வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றி எல்லாம் கவலையேப்படாமல் எப்போதும் போல் மது அருந்துவதுண்டு. இப்படிப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்? என்பது தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஒரு வியக்கத்தக்க முடிவு தெரியவந்துள்ளது.

குடிப்பழக்கம் உள்ள தாயின் கருப்பைக்குள் இருந்தபோது அந்தப் பெண் குடித்த மதுவில் இருந்த ஆல்கஹாலின் தாக்கம் பிறந்த குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது தொடர்பாக முதலில் நடத்தப்பட்ட ஆய்வின் பலனாக, பிறந்த குழந்தை முதன்முதலாக கழிக்கும் மலத்தை பரிசோதிப்பதின் மூலம் இதற்கான விடையை அறிந்து கொள்ள முடிந்தது.
i q child july 15  b
இந்த முதல் மலத்தில் (fatty acid ethyl esters (FAEE) என்றழைக்கப்படும் ஆல்கஹாலின் தாக்கத்துடன் கூடிய கொழுப்பு அதிக அளவில் தென்பட்டால் அது, அந்தக் குழந்தையின் அறிவுத்திறனை பெரிய அளவில் மழுங்கடித்து விடும் என்பது இதற்கு பிந்தைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இவ்வகை பாதிப்புடன் பிறந்த 216 குழந்தைகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து, அதே குழந்தைகள் முறையே 9, 11, 15 வயதை அடைந்தபோது, அறிவாற்றல், புத்திக்கூர்மை, கேள்வித்திறன் ஆகியவற்றில் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பின்தங்கி இருந்தது தற்போது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவானது, குழந்தைகள் மருத்துவத்தில் பெரிய பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது.