October 25, 2021

ஈஸி ஃபைன்டர் என்னும் புது வகை AA or AAA battery!

மறதி என்பது மார்டர்ன் நோய் – அனேக பேர் மொபைல் ஃபோனை தேடுவார்கள் ஆனா கிடைக்காது – மிஸ்ட் கால் கொடுத்து தேடலாம்னா ஃபோன் சைலென்ட்ல இருக்கும் – ரிமோட் – கார் சாவி – என பல பொருட்களை தேடும் ஆட்களுக்கு ஆர் எஃப் ஐடி போன்ற பல வந்தாலும் அதை தனியா காசு கொடுத்து வாங்கணும் அதை அந்த பொருளின் பின்னாடி ஒட்டனும்னு கடுப்பு வேலை இனிமே இல்லை. ஈஸி ஃபைன்டர்னு ஒர் புது வகை AA or AAA battery வந்திருக்கு.
ravi 8
இதை உதாரணத்திற்க்கு உங்க டிவி ரிமோட்ல போட்டா எங்கு ரிமோட் தொலைந்தாலும் உடனே ரிமோட்டை இந்த ஈஸி ஃபைன்டர் ஆப் உங்க மொபைல்ல இன்ஸ்டால் செய்தா உடனே ரிமோட் இருக்கும் இடம் தெரியும் அது மாதிரி வாட்ச் கார் கி மற்றும் மொபைல்க்ளுக்கும் இது வரப்பிரசாதம்.

இது டூராசெல் போல அதிக சக்தி வாய்ந்தது மட்டுமில்லாமல் இதை எப்ப வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்ய முடியும். வீட்ல கணவனின் சட்டைப்பைக்குள் ஒரு பேட்டரியை போட்டால் மனுஷன் எந்த ரூம்ல நிம்மதியா இருக்காருனு கண்டுப்பிடிச்சு கொன்னு களையலாம் மனைவிமார்களே.

இதன் செயல் முறை விளக்க வீடியோ இதோ :

Simple battery can track your devices – From TV Remote to Smart Phone –