June 21, 2021

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்: இடிந்து தரை மட்டமாகும் கட்டிடங்கள்!- வீடியோ!

மலான் மாதம் ஆரம்பமானது முதல் இஸ்ரேல் காவல்துறையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த திங்களன்று பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில், ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில், 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், காசா முனைப்பகுதியில் இருக்கும் 13 மாடி கட்டிடம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலால் தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கட்டிடம், ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், காசா நகரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தையும் இஸ்ரேல் ராணுவத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். ஆனால், இதில் குடியிருந்த மக்கள் தாக்குதல் நடத்தப்படுவது அறிந்து முன்னதாகவே வெளியேறியதால் பெருமளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன

காஸாவில் உள்ள உயரமான 12 மாடி அல் ஜாலா கட்டிடத்தில் இந்த அலுவலகங்கள் இருந்தன. அங்கு இன்னும் பல உள்ளூர் செய்தி நிறுவனங்களும் இருந்தன. நேற்று அங்கு தாக்க போவதாக இஸ்ரேல் அறிவிச்சுபுட்டு ஜஸ்ட் ஒரு மணி நேரம் டைம் தருகிறோம், உடனே வெளியேறுங்கள், அப்புறம் தாக்குதல்தான் -அப்படீன்னு இஸ்ரேல் தகவல் அனுப்பியது. இதையடுத்து இங்கு இருந்த செய்தியாளர்கள் எல்லோரும் வெளியேறும் காட்சியைப் பாருங்களேன்